பக்கம்:நற்றிணை-2.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை 123 கூர்மையான நுனியையுடைய களாவின் அரும்புகள் ஒருங்கே மலர்ந்து மணங்கமழும்; பிடவினது அரும்புகள் கட்டவிழ்ந்து இதழ்விரிந்து மலர்ந்திருக்கும்; இங்ங்னமாகப் கார்காலமும் தனக்கு உரியதான பெயலைச் செய்தது. இனி தான இக்காலத்தின் மாலைப்பொழுதிலே, இளைய பிணை யினைத் தழுவியின்புற்ற கரிய பிடரினைக் கொண்ட கலைமானானது, வயிரமேறிய வேலமரத்தினது தாழ்ந்து கிடக்கும் கிளைகள் பயந்த, காண்பார் கண்களைக் கவர்கின்ற வரிப்பட்ட நிழலிடத்தே சென்று தங்கியிருக்கும் குளிர்ச்சி பொருந்திய காட்டிடத்தே, நின்னைக் கூடியிருப்பதற்குரிய தான இக் கார்காலத்துச்செல்வதனையும் யாம் கைவிட்டனம். எனவ்ே, நின்னைப் பிரிவேனேன நினைந்து நீயும் நலிவது வேண்டாதது காண்! - சொற்பொருள் : அமர்த்தல்-மதர்த்தல். அழல்-கோடை யின் வெப்பம். கவர்தல்-சுட்டெரித்தல். புலம்பு-தனிமை; அது மாவும் பிறவும் வழங்குதல் அற்றுப்போன தன்மை. நல்ம்-காடுதரு பொருள்களாலும் பசுமையாலும் விளங்கிய பொலிவு. களவு-களாமரம். பிடவு-பிடாமரம். எருத்து. பிடரி. இரலை-கலைமான். காழ்-வயிரம். தண்படுகானம். குளிர்ச்சிபட்ட காடு. விளக்கம் : கோடைகாலத்தே நின் சிற்றடிகள் காட்டின் வெம்மையைத் தாங்காவெனக் கருதியும், நின் கண்களின் அழகெலாம் கெடுமெனக் கருதியும், யாம் செலவைக் கைவிட்டனம். இக் கார்காலத்தேயோ மானினம் கூடிக் கலத்தலைக் கண்டு, யாமும் நின்னைப் பிரிந்து போதற்கு விரும்பாதே, நின்னேடும் இருத்தலையே விரும்பினமாதலின் செலவைக் கைவிட்டனம் என்கின்ருன். இதன் பயனகத் தலைவியும், தன் துயரத்தை விட்டா ளாய்த் தலைவனோடு கூடிக் கலந்து இன்புறுவள் என்பதாம். 'பல்குறப் பெருநலத்து அமர்த்த கண்ணை’ எனக் கண்களை வியந்தது, அவள் கண்கலங்கி நீர் சொரிய நின்றது கண்டு, அவளைத் தேற்றுவாகைக் கூறியதாகும். பாடல் சான்ற பழிதபு சீறடி என அடியை வியந்தது, அவள் தெளி யாளாக அடிதொட்டுச் சூளுரைப்பான் சொல்வதாகும். ‘மடப்பிணை தழிஇய மாவெருத் திரலை என்றது, அவ் வாறே தானும் தழுவியிருத்தலையே நினைப்பதன்றிப் பிரிந்து போதலை நினையாதான் என்று கார்காலத்தைக் காட்டிக் கூறுகின்ருனும் ஆம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/127&oldid=774120" இலிருந்து மீள்விக்கப்பட்டது