பக்கம்:நற்றிணை-2.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை 131 உள்ளுறை : செங்கழுநீரை யுண்ட எருமையானது, பின் தாமரை மலரை உண்டு, அதனையும் வெறுத்துச் செருக்கு நடை நடந்து சென்று, வெண்மணற் குன்றிலே சென்று கிடந்து துயிலும் என்றனள். இவ்வாறு தலைவியை நுகர்ந்தவன், காதற் பரத்தையை நாடிச் சென்று நுகர்ந்த பின், அவளையும் வெறுத்து, செருக்கோடு சென்று சேரிப் #vir மயங்கிக் கிடந்தனன் என்று கூறியது து. வெகுளி தோன்றக் கூறிளைாயினும், அவன் வேண்டத் தன் ஊடல் தீர்பவள் ஆவள் என்பதே இதன் பயனகும். 261. அருளிலர் வாழி தோழி! பாடியவர் : சேந்தண் பூதனர். திணை : குறிஞ்சி. துறை : சிறைப்புறமாகத் தோ இரவுக்குறி விலக்கி வரைவு கடாயது (1) தலைமகள் இயற்பட மொழிந்து உம் ஆம். (து-வி.) தலைவன் வந்து ஒரு சிறைப்புறமாக நிற்பதறிந்து அவன் மனதை வரைந்து வருதலிலே செலுத்தக் கருதிய தோழி, தலைவிக்குச் சொல்வது போல அமைந்த செய்யுள் இது. (2) தலைவி தன்னைத் தலைவன்- வரைந்து கொள்ள, முற்படாததன நினைத்து வருந்தத் தோழி தலைவன அது குறித்துப் பழித்துக் கூறுகின்ருள். அவ்ளுக்குத் தன் கற்புத் தன்மை புலப்படத் தலைவி கூறுவதாக அமைந்ததும் இச் செய்யுள் ஆகலாம்.) அருளிலர் வாழி தோழி! மின்னுவசிபு இருள்துங்கு விசும்பின் அதிரும் ஏருெடு வெஞ்சுடர் கரந்த கடுஞ்சூல் வானம் நெடும்பல் குன்றத்துக் குறும்பல மறுகித் தாவில் பெரும்பெயல் தலைஇய யாமத்துக் 5 களிறகப் படுத்த பெருஞ்சின மாசுணம் வெளிறில் காழ்மரம் பிணித்து கணிமிளிர்க்கும் சாந்தம் போகிய தேங்கமழ் விடர்முகை எருவை நறும்பூ நீடிய பெருவரைச் சிறுநெறி வருத லானே, 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/135&oldid=774129" இலிருந்து மீள்விக்கப்பட்டது