பக்கம்:நற்றிணை-2.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

\ நற்றிணை தெளிவுரை - I37 உள்ளுறை: வயலிலே தங்கிய பேடைக்கு நாரைப் போத்து கடல்மீனைக் கொண்டுவந்து தந்து உதவுதல் போலத், தலைவியை இல்லத்தே கொண்டுவைத்துத் தானும் பொருளைத் தேடிவந்து அவளுடனே கூடி இன்பமான இல்வாழ்க்கையினே நடத்துதல் வ்ேண்டும் என்பதாம். ዩ” 264. ஐதுவிரித்த அணிகிளர் கலாவம்: பாடியவர்: ஆவூர்க் காவிதிகள் சாதேவனர். தின : பாலை. துறை : உடன் போகாநின்ற தலைமகன் தலைமகளை வற்புறீஇயது (1); உடன்போய் மறுத்தரா நின்ருன் ஊர்காட்டி வற்புறீஇயதும் ஆம் (2). - [ (து.வி.) உடன் போக்கிலே தலைவியோடு செல்லும் தலைவன்; அவளது வருத்தங்கண்டு, அவளைத் தேற்றி, விரையச் செல்லுமாறு நயமுடன் கூறி வற்புறுத்துவதாக அமைந்த செய்யுள் இது (1); அவன் தன் ஊர் அணிமைக் கண் வந்தது எனக் காட்டி அவளை விரைவுபடுத்தியதும் ஆம் 21 - பாம்பளைச் செறிய முழங்கி வலனேர்பு வான்தளி பொழிந்த காண்பின் காலை அணிகிளர் கலாவம் ஐதுவிரித் தியலும் மணிபுரை எருத்தின் மஞ்ஞை போலகின் வீபெய் கூந்தல் வீசுவளி உளர - 5 ஏகுதி மடங்தை எல்லின்று பொழுதே! . جمیے" வேய்பயி லிரும்பிற் கோவலர் யாத்த • . ஆபூண் தெண்மணி இயம்பும் உதுக்காண் தோன்றுமெம் சிறுநல் லூரே! தெளிவுரை : மடந்தையே! பொழுதும் ஒளிகுறைவுற்ற தாய் மறையத் தொடங்குகின்றது. மூங்கில் செறிந்துள்ள குறுங்காட்டுப் புறங்களிலே, கோவலர்கள் பசுக்களுக்குக் கட்டியுள்ள அழகிய தெளிவான ஒசைகொண்ட மணிகளும் ஒலிக்கத் தொடங்கின. அவ்விடத்தே காண் பாயாக! எம் சிறிய நல்ல ஊரும் அதோ தோன்றுகின்றது. பாம்பு அச்ச முற்றுத் தனது புற்று வளையிடத்தே சென்று பதுங்குமாறு முழக்கமிட்டபடி, வலமாக மேலெழுந்து வானமும் மழையைப் பொழிந்தது; அதனலே நிலப்பரப்பு எங்கனும் காண்பதற்கு இனிதான செடி கொடிகளாலே பசுமை 9ض.ؤpt

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/141&oldid=774136" இலிருந்து மீள்விக்கப்பட்டது