பக்கம்:நற்றிணை-2.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 நற்றிணை தெளிவுரிை அழகினையுடையவள் இவள் ஆவாள். இவளது தழைத்த மென்க்ந்தலானது நமக்கே உரியவாகும் அல்லவோ! ' சொற்பொருள் : இறுகுபுல்-காய்ந்துபோன கரட்டுப்புல்; தரை ஈரமற்று இறுகிப் போகப் புல்லும் கரடுபட்டுப் போயிற்று என்க. அதனை மேய்தலாலே கோடு தரையிற் பட்டுப்பட்டுத் தெரித்து வீழ்தலின் அறுகோட்டு என்றனர். முற்றல்-முதிர்ச்சி, கலேயின் கோடு முதிர்ச்சியடைந்ததும் கழன்று வீழும்! அதுபோது உண்டாகும் நோவைத் தீர்த்துக்கொள்ள, அது சேற்றிலே ஆடியது என்று கொள்க. அதுவும் அச்சமின்றி வாழும் சிறப்புடையது மிஞரிலி காக்கும் பாரம்! "சிறுகோல்’ என்றது செங்கோலினை; அது செங் கோன்மையின் அடையாளமாகச் சோழன் கையிலே திகழ்வது, ஆரேற்று என்றது, சோழன் தனக்கு உட்பட்ட தலைவர்களை வரவேற்றுப் பாராட்டி ஆத்திமாலை சூடிப் போற்றும் ஒருவகை விழாக் கோலம். கலிமயில் - செருக்கிய மயில். விளக்கம் : நோயுற்றுத் தன் கழன்ற கோட்டைவிட்டு எஞ்சிய பகுதியைச் சேற்றிலாட்டியபடி இருக்கும் கலை மானுக்குத் துன்பஞ் செய்யாது ஏகும் வீ அம்பின் வில்லோர் என்று, அவரது அருளுடைமையைக் கூறினர். தனக்கு உட்பட்டாரையும் வரவேற்றுப் போற்றி, அவர்க்கும் தனக்கு ஒப்ப ஆத்திசூடி மகிழும் சோழனின் சிறந்த அருளுந் தன்மையையும் கூறினர். மாரிபோல வழங்கும் வண்மையும், மகிழ்வூட்டும் கள்வளமும் கொண்ட கொல்லிமலையிலே செருக்கித் திரியும் மயிலின் எழிலையும் கூறினர். இதல்ை, தலைவியது குடிச்சிறப்பும், அருள்தல் உள்ள்மும் காட்டி, அவள் தனக்கே உரியவள் என்பதும் கூறுகின்ருன் தலைவன்! போற்றப்பட்டோர் : கொண்கான நாட்டு நன்னனின் படைத்தலைவருள் ஒருவகிைய மிஞலி என்பவன்; 'சென்னி' என்பர்ன் கரிகாலனின் தந்தையாகிய இளஞ்சேட் சென்னி; ஓரி கொல்லி மலைக்குத் தலைவன். கூந்தல் நழ்வழிேைன' என்றது. அது தன் ஒருவேைலயே திண்டற்கு உரியதென்னும் உரிமை பற்றியாம் கலிமயிற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/144&oldid=774139" இலிருந்து மீள்விக்கப்பட்டது