பக்கம்:நற்றிணை-2.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|46 நற்றிணை தெளிவுரை ஏற்பாடு செய்தனள். அச்சம் பொருந்திய அகன்ற இடத் தேயுள்ள சுனைக்கண்ணே நீர் நிறையும்படியாக, மேக மானது பெரும் பெயலைச் செய்வதற்குத் தலைப்பட்ட மிகவும் நெடிதான குன்றத்திடத்தே, க்ரிய கரம்புகளை யுடைய குறிஞ்சியது வன்மையில்லாத வெண்மையான பூக்களிலே, வேட்டுவரது இல்லங்களிலே ஒவியத்துக் கண் டாற்போலக் கட்டப் பெற்றுள்ள, மணங்கமழும் தேன் அடைக்கு வேண்டியவளவு தேன் ஊறிக்கொண்டிருக்கின்ற நாடன், நம் தலைவன்! அவனுக்கு யாம் பலபடியாகக் காதல் செய்து ஒழுகியபோதும், அவனலே அந்த அளவுக்கு யாமும் காதலிக்கப்படாமைதான் எந்தக் காரணத்தாலோ? இதனை யாமும் வேலனிடம் வினவுவோம்; வருக, தோழி! சொற்பொருள் : சூர் - அச்சம். நனந்தலை - அக ன் ற இடம். மால்பெயல் - பெரும் பெயல். மன்னெடுங் - மிகவும் நெடுமையான. மதனில - வலிமையிலவாகிய, மென்மை மிகுந்த். வான்பூ - வெண்மையான பூ. ஒவு - ஒவியம். இழைத்த - கட்டியுள்ள தேனீக்கள் இல்லச் சார்பிலே கட்டியுள்ள தேனடையானது ஒவியந் தீட்டிற்ைபோல இல்ல்த்தை அழகு செய்தப்டி இருந்தது என்பதாம். பிரசம் - தேன். கடிகொள்ளல் - விளக்கங் கொள்ளல். விளக்கம் தலைமகன் வரைந்து கொண்டு வருதலை நினையாது களவினையே நாடியவனதலைக் கண்டு, அவனுக்குத் தலைவியின் நோயை அன்னை அறிந்தனள் என்பதனையும், இனித் தலைவி இற்செறிக்கப்படுவாள் என்பதனையும், அவள் அவனின்றி வாழாள் என்பதனையும் குறிப்பாக உணர்த்தக் கருதுகின்ற தோழி இவ்வாறு உரைக்கின்றனள். இதனைக் கேட்டலுறுவானகிய தலைமகன், தலைவிபாற் பெருங் காதலன் தானுமாதலின், தலைவியை மணந்து கொள்ளுதலே நினைந்து செயற்பட முற்படுவானவன் என்பது இதன் பயணுகும். காதல் இசய்தலும் தாதலம் அன்மை' என்றது, அவன் இன்ப மாத்திரையே த்ம்மை விரும்புகிறவனயினன் என்று வருந்துவதாகும். உள்ளுறை : குறிஞ்சிப் பூவின் தேனனது இல்லத்தே இழைத்திருக்கும் தேனடையிலே ஊறும் என்றது, சோலைக் கண்ணே தலைவல்ை தலையளி செய்யப் பெற்ற நினைவு களாலே, இல்லத்துச் செறிப்புண்டிருக்கும் தலைவியும் இறந்துபடாளாய் உயிரோடிருப்பாள் என்பதாம், *.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/150&oldid=774146" இலிருந்து மீள்விக்கப்பட்டது