பக்கம்:நற்றிணை-2.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

\ , - \o i ! . - நற்றிணை தெளிவுரை 462 ب "ميناء (グ、 o ராலே வாடியிருக்கும் தலைவியும், தலைவன் வரைவொடு ' வரின், அனைத்தும் மறந்தவளர்க உவகை கொள்வாள்

என்பதாம். - | இதனைக் கேட்டலுறும் தலைவன், தலைவியை முறையாக

மணந்துகொண்டு, பிரியாது வாழும் இல்லற வாழ்விலே மனஞ் செலுத்துவான் என்பது இதன் பயனகும். 276. கட்சி சேக்கும் கான மஞ்ஞை! பாடியவர் தொல் கபிலர். திண: குறிஞ்சி. துறை : பகற்குறி வந்து பெயரும் தலைமகனை உலகியல் சொல்லியது. (து. வி.) பகற்குறிக் கண்ணே தலைவியைக் கூடி இன்புற்றுத் தன் ஊர்க்குச் செல்லும் தலைமகன்பால், அவன்த் தன் இல்லிலே வந்து விருந்துண்டு போக அழைப் பாள்போல, விரைவிலே பலரறி மணத்தைத் தோழி அறிவுதுத்துவதாக அமைந்த செய்யுள் இது.) கோடு துவையாக் கோள்வாய் நாயொடு காடுதேர் நசைஇய வயமான் வேட்கும் வயவர் மகளிர் என்றி யாயின் குறவர் மகளிரேம் குன்றுகெழு கொடிச்சியேம் சேணேன் இழைத்த நெடுங்கால் கழுதில் 5 கான மஞ்ஞை கட்சி சேக்கும் கல்லகத் ததுவெம் மூரே செல்லாது சேர்ந்தனை சென்மதி நீயே பெருமலை வாங்கமை பழுனிய நறவுண்டு வேங்கை முன்றிற் குரவையும் கண்டே! 10 தெளிவுரை : கொம்புகளை ஊதியபடி, கொள்ளுதலிலே வல்ல வாயையுடைய நாயோடும் சென்று, காட்டின்கண்ணே இரை தேடியபடி இருக்கும் விருப்பத்தையுடைய வலிய விலங்கினையே தாம் கொள்ளுதலை விரும்பும், வேட்டுவ வீரரின் மகளிர் என்று எ ம் மை ச் சொல்வாயாயின், யாம் அவரல்லேம்! யாம் குறவர் மகளிரேம். குன்றிடத்தே வாழ்கின்ற கொடிச்சியரேம். தினை காவலன் கட்டிய நெடிய , கால்களையுடைய பரணிடத்திலே, காட்டு மயில்கள் தமக்கு வேண்டும் ஒதுக்கிடமாகக் கருதித் தங்கியிருக்கும் மலையின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/166&oldid=774163" இலிருந்து மீள்விக்கப்பட்டது