பக்கம்:நற்றிணை-2.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றி ைதெளிவுரை % 167 عبة கொண்டேன். கடற்கழியின் சேற்றிடத்தே வந்தமையால் சேறுபடிந்த திரண்ட கால்களைக் கொண்ட கோவேறு கழுதையின் குளம்பின் எப்புறமும் சிவந்த இரு மீன்கள் உள்ளொடுங்கப் பட்டவாய் அழிந்தன. மற்று, அவன்றன் கோதையிடத்தும், அணிந்த உடை முதலிய யாவற்றினும் காற்ருல் எறியப்படும் வெளிய நுண்மணல் சென்று படிந் துள்ளது! கருத்து இதல்ை, அவன் நின்ன்ே மணந்து கொள் வதனலே, நீயும் இனி இன்புற்றிருப்பாயாக’ என்று வாழ்த் தியதாம். சொற்பொருள்: படுகாழ் - தானே வீழும் வித்து; யாரும் போடாதது என்பது கருத்து. நாறுதல் - முளைத்து வளர்தல். பராரை - பருத்த அடிமரம். அடுமரல், புன்னேயை அடுத்து வ ள ர் ந் து ள் ள மரல். மரல் கள்ளி வகை யுள் ஒண்று. .ெ மா க் கு ள் - மொ ட் டு; பூவரும்பு சூடு நர் . பூச்சூடுவாரான மகளிர். நெய் - எண்ணெய். பசுங் காய் - பசிய காய்கள்; வெண்முகை இதழ் விரிந்து பொன் னிறத் தாதோடு விளங்கி இப்போது பசுங்காயாயும் ஆயிற்று என்க. கொண்கன் கணவன். கழி - உப்பங் கழி. ஊதை - ஊதற் காற்று. விளக்கம் : அவன் விரைந்து வருகின்ருன் என்பதும், பலரறிய வருகின்ருன் என்பதும் தோன்ற இரு அத்திரியின் குழம்பில் ஒடுங்கினதும், கோதை முதலாயவற்றுள் ஊதை மணல் ஒடுங்கினதும் கூறினளாம். இதனால், அவன் பகற் போதிலேயே பலரறிய வந்தனன் என்பதும், அதுதான் வரைவொடு வந்தது என்பதும் உணர்த்தினுள். 279. அதர்உழந்து அசையினன் கொல்லோ! பாடியவர் : கயமனர். திணை : பாலை. துறை : மகட் போக்கிய தாய் சொல்லியது. ((து. வி.) தலைவைேடு_ தலைவியும் உடன்போக்கிற் சென்று விட்டனள். அவள் செயல் அறைெடு பட்டதென்றே கருதிலுைம், அவளைத் திடுமெனப் பிரிந்ததனுலே, தாயின் மனம் பெரிதும் வேதனைப்படாமலும் இல்லை; அந்த மன வேதனையைக் காட்டுவதாக அமைந்த செய்யுள் இது.) | | |

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/171&oldid=774169" இலிருந்து மீள்விக்கப்பட்டது