பக்கம்:நற்றிணை-2.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. À 172 நற்றிணை தெளிவுரை Z ஒப்புமை: கொக்கின் அன்ன கூம்புமுகைக் கணக்கால் ஆம்பல் (நற் 230) எனப் பிறரும் உரைப்பர். y மேற்கோள்: "அவனறிவாற்ற அறியுமாகலின் என்னும் சூத்திரத்து, வாயிலின் வரூஉம் வகையொடு தொகைஇ’ என்பதற்கு இச் செய்யுளை எடுத்துக் காட்டி, 'இது, தலைவ ைேடு புலவாமை நினக்கு இயல்போ? என்ற தோழிக்கு, விருந்தால் கைதுரவாமையின் அவனை எதிர்ப்படப் பெற்றி லேன்; அல்லது புலவேனே? என்றவாறு, என நயமும் உரைப்பர் நச்சினர்க்கினியர்.(தொல். பொருள்.147). 282. அன்பிலர் தோழி நம் காதலர் ! பாடியவர் : கழார்க்கீரன் எயிற்றியார்.தினே : பாலை. துறை : (1) வன்பொறை எதிரழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது. (2) ஆற்ருள் எனக் கவன்ற தோழி தலைம்கட்கு உரைத்தது உம் ஆம். [ (து-வி.) (1) பிரிந்தவன், தான் வருவதாகக் குறித்த காலத்தும் வராததேைல பெரிதும் ஆற்ருளாயினுள் தலைவி. அவளை, 'இன்னும் சற்றுப் பொறுத்திரு” என்று தோழி வற்புறுத்துகின்ருள். அவளுக்குத் தலைவி சொல்வ தாக அமைந்த செய்யுள் இது. (2) தலைமகள் இனியும் பொறுத்திருக்க ஆற்ருள் எனக் கவலையுற்ற தோழி, தலை மகட்கு உரைத்ததாகவும் கொள்ளப்படும்.) மாசில் மரத்த பலியுண் காக்கை வளிபொரு நெடுஞ்சினை களியொடு தூங்கி வெல்போர்ச் சோழர் கழாஅர்க் கொள்ளும் நல்வகை மிகுபலிக் கொடையோடு உகுக்கும் அடங்காச் சொன்றி அம்பல் யாணர் 5 விடக்குடைப் பெருஞ்சோறு உள்ளுவன இருப்ப மழையமைந் துற்ற மாலிருள் நடுநாள் தாம்நம் உழைய ராகவும் நாம்கம் பனிக்கடுமையின் கனிபெரிது அழுங்கித் துஞ்சாம் ஆகலும் அறிவோர் 10 அன்பிலர் தோழிங்காத லோரே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/176&oldid=774174" இலிருந்து மீள்விக்கப்பட்டது