பக்கம்:நற்றிணை-2.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 நற்றிணை தெளிவுரை ஊசல் ஒண்குழை உடைவியத் தன்ன அத்தக் குமிழின் ஆயிதழ் அலரி கல்லென வரிக்கும் புல்லென் குன்றம் சென்ருேர் மன்ற செலீஇயரென் உயிரெனப் புனையிழை நெகிழ விம்மி நொந்துகொங் 5 தினதல் ஆன்றிசின் ஆயிழை கினேயின் கட்டோ ராக்கம் வேண்டியும் ஒட்டிய கின்தோள் அணிபெற வரற்கும் அன்ருே தோழியவர் சென்ற திறமே! தெளிவுரை: ஆய்ந்து புனைந்த அணிகளை உடையாய்! தோழி! 'மலையிடத்தேயுள்ள குமிழமரத்தின் அழகிய இதழையுடைய மலரானது ஊசலைப்போல அசைந்தாடும் மகளிரது ஒள்ளிய குண்டலம் போலத் தோன்றும். காற்று வீசும்போது, கல்லென்னும் ஒலியோடு அவை உதிர்ந்து உடைமரங்கள் மிக்க நெறியிடத்துக் கோலமுஞ் செய்யும். அத்தகைய பொலிவிழந்த குன்றத்திடத்தேயும் நம் காதலர் சென்றனர். ஆதலினலே, "என் உயிரும் இனிப் போய் ஒழிவதாக’ என்று மிகக் கூறுகின்றன. நீதான், நின்னைப் புனைந்திருக்கும் அணிகள் கழன்று வீழும்படியாக விம்மி அழுதலையும் செய்கின்றன. மிகவும் மனம் நொந்தனையாய் வருந்துதலையும் செய்கின்றன. சிறிது பொறுத்திருப்பாயாக. னைந்து பார்ப்போமாயின், தம்மை நட்புக்கொண்டாரது ஆக்கத்தினை விரும்பியும், தம்மைச் சேர்ந்த நின் தோள்கள் அழகுபெறுமாறு கலன்களைக் கொணர்ந்து தருதற்குமாக அன்ருே, அவர் தான் நின்னைப் பிரிந்து சென்றதன் தன்மை உளதாகும்!" சொற்பொருள்: ஒண் குழை - ஒளியுள்ள குண்டலம்; இதுதான் அசைந்தாடும் இயல்பினது ஆதலின், ஊசல் ஒண் குழை என்றனர். உடை - உடைமரம் வியம் - வழி. குமிழ மலர் அசைந்தாடும் காதணிபோல விளங்கும் என்பது காணக் கூடியது. கல்லென - ஆரவாரத்தோடு. வரித்தல் . கோலஞ் செய்தல்; இது கற்பாறையிடத்தே மலர்கள் உதிர் தலால் உண்டாகும் தோற்றம். இணைதல் - ஏங்கிப் புலம் புதல். நட்டோர் - நட்புச்செய்த காதலர். ஆக்கம் - மேம் பாடு - வளம்; இது இல்லறம் செழுமையாக நடக்க வேண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/186&oldid=774185" இலிருந்து மீள்விக்கப்பட்டது