பக்கம்:நற்றிணை-2.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

isö நீற்றிணை தெளிவுரை தெளிவுரை : அருவிகள் ஆரவாரித்தபடியே வீழ்ந்து கொண்டிருப்பதும், அணங்குகளை உடையதுமான நெடிய கொடுமுடியின் பக்கத்திலேயுள்ள உயரமான மரக்கிளை களிலே, பீலியையுடைய ஆண்மயிலானது தன் பெடை யோடுங் கூடி ஏறியமர்ந்ததாய் இளவெயில் காய்ந்தபடியே ஆடிக்கொண்டிருக்கும் மலைநாடன், நம் தலைவன் ஆவான். அவன் நின்னைப் பிரிதலினலே முன்னை அழகெல்லாம் கழிந்து போய், நல்ல நெற்றியிடத்தேயும் நினக்குப் பசலை படர்ந் தது. அதனைக் கண்டனள் அன்னை. செம்மையும் முதுமை யும் கொண்டவரான பெண்டிரோடும் முறத்திலே நெல்லைப் பரப்பிக் கட்டு வைத்தனளாகக் குறி கேட்பாளாயின் யாம் என் செய்வோம்? வெற்பிடத்துள்ள ஏனலாகிய செந்தினை யின்பால் நிரம்பிய கொழுவிய கதிர்களைக் கொய்து போகும் கிளிகளை வெருட்டுவேமாகச் சென்றிருந்தும், இந்த நெடிய முருகவேள்தான் அணங்கியதென்ருல், அக் குறியிடத்தும் முருகு நிற்குமோ? - கருத்து : அன்னை அறிந்தனளாதலின், இனி இற் கெறிப்பே நிகழும். ஆகவே, விரைய வந்து மணத்தலே செய்யத்தக்கது என்பதாம். - சொற்பொருள் : அணங்கு - தெய்வம்; அச்சமும் ஆம்; அச்சம் மரச்செறிவால் உண்டாவது. ஞாங்கர் - பக்கம். பிலிமஞ்ஞை - மயிலின் ஆண். பெடை - அதன் பெட்டை. செம்முது பெண்டிர் - ஊரிடத்தேயுள்ள முதுபெண்டிர். கட்டு-கட்டுவைத்துக் குறி காணல். தலைமகளை முன்நிறுத்தி முறத்தில் நெல்லை வைத்துத் தெய்வத்துக்குப் பிரப்பிட்டு வழிபாடு செய்து நந்நான்காக எண்ணிக் காணல். எச்சம் ஒன்று இரண்டு மூன்ருயின் முருகு அணங்கிற்று என்று கொள்வது மரபு. நான்கு சரியாயின் வேறு நோய் என்பர். முருகு அணங்கியது எனக் காணின் வெறியயர்தற்கு வேலனை அழைத்து ஏற்பாடு செய்வர். பாலார் - பால் நிரம்பிய. நெடுவேள் . முருகவேள். உள்ளுறை : மயில் பெடையொடுஞ் சென்று விளையாடி யிருக்கும் என்றது, தலைமகனும் தலைமகளை மணந்து கொண்டு சென்று இன்புறுதல் வேண்டும் என விரும்பிய தாம். விளக்கம்:களவுறவால்தலைவியின் மேனியழகு மாறுபடக் கண்ட அன்னை, அது முருகணங்கியதால் ஏற்பட்டதெனக் கலங்கிக் கட்டுவிச்சியரை அழைத்துக் கட்டுக் காண்பாளா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/190&oldid=774190" இலிருந்து மீள்விக்கப்பட்டது