பக்கம்:நற்றிணை-2.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

aÁ F \ - çe 3 * 196 4. R : • நற்றிணை தெளிவுர்ை அன்றி அவளைத் தன்ளுேடும் அழைத்துச் சென்ற காளையா வானின் காதலீடுபாடுப்ற்றியோ நினைப்பிற் கொண்டிலள். அவனது வன்கண்மையை நினைந்து, அத்தகு வன்கண்மை உடையவனக அவனை வளர்த்துவிட்ட அவன் தாயானவள், தானும் தன் மகளைப்பிரிந்து தன்னைப்போலவே பெரிதும் வருந்த வேண்டும் என்றே புலம்புகின்ருள். பெண் மையின் மனவியல்பை நுட்பம்ாகக் காட்டும் சிறந்த செய்யுள் இதுவாகும். வெகுளியிலே தாய் கொள்ளும் மெய்ப்பாடும் அதனை ஆற்றும்வகையால்ே அவள் புலம்பும் புலம்பலும் நுட்பமாக இயல்பாக அமைந்துள்ளன. 294. நோயும் இன்பமும் ஆகின்று ! பாடியவர்: புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழான், திணை : குறிஞ்சி. துறை : மணமகனை உட்புக்க தோழி தலைமகளது கவின்கண்டு சொல்லியது. - ((து.வி.) தலைவியைத் தன்னுடனே அழைத்துப் போய் மணந்து கொண்டு, தலைவன் இல்வாழ்க்கை நடத்துவதனைக் கண்டு, தோழி வியந்து கூறியது.) தீயும் வளியும் விசும்புபயந் தாங்கு நோயும் இன்பமும் ஆகின்று மாதோ மாயம் அன்று தோழி வேய்பயின்று எருவை நீடிய பெருவரை அகந்தொறும் - தொன்றுறை துப்பொடு முரண்மிகச் சினஇக் 5 கொன்ற யானைக் கோடுகண்டு அன்ன செம்புடைக் கொழுமுகை அவிழ்ந்த காந்தள் சிலம்புடன் கமழுஞ் சாரல் விலங்குமலைநாடன் மலர்ந்த மார்பே தெளிவுரை : தோழி! பெரிய மலையிடத்து உட்பகுதி தோறும் மூங்கில்கள் நெருங்கி வளர்ந்திருப்பதோடு கொருக்கச்சியும் முளைத்துப் பரவியிருக்கும். அவ்விடத்தே, தொன்றுதொட்டே வருகின்ற பகையாகிய புலியோடும் மாறுபாடு மிகுதியினலே சினஞ்சிறந்தது களிறு ஒன்று. அப் புலியைத் தன் கோட்டாலே குத்தியும்கொன்றது. அதனல்ே, குருதிக்கறை படிந்த அதன் கொம்பைப் போலச் சிவந்த புறத்தையுடைய கொழுவிய காந்தள் முகையினது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/200&oldid=774201" இலிருந்து மீள்விக்கப்பட்டது