பக்கம்:நற்றிணை-2.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

\\ இ98 நற்றிணை தெளிவுர்ை "No 295. முதிர்ந்து முடிவேம் யாமே ! o தோழி செறிப்பு:அறிவுறீஇ வரைவு கட்ாய்து. (1) சிற்ைப் பாடியவர் ஒளவையார். திணை: நெய்தல். துறை: (1) புறமும், ஆம். (து வி.) (1) தோழி தலைமகனை நெருங்கி, நம் உறவை அறிந்தனள் அன்னையாதலின், தலைவியை இற்சிறை வைக்கவும் எண்ணினள்’ என்று கூறுகின்ருள். ஆகவே, இனிக் களவுறவு வாயாது; வரைந்துவந்து இவளே மணந்து கொள்ளுதற்கு விரைவாயாக என்று குறிப்பாகப் புலப் படுத்துகின்றனள். (2) தலைவன் சிறைப்புறத்தாகை, அவன் கேட்குமாறு தோழி கூறியதும் இதுவாகும்.) முரிந்த சிலம்பின் எரிந்த வள்ளியின் புறனழிந்து ஒலிவரும் தாழிருங் கூந்தல் ஆயமும் அழுங்கின்று யாயும்.அ. தறிந்தனள் அருங்கடி அயர்ந்தனள் காப்பே எங்தை வேறுபல் காட்டிற் கால்தர வந்த 5 பலவின நாவாய் தோன்றும் பெருந்துறைக் கலிமடைக் கள்ளின் சாடி அன்னளம் இளநலம் இற்கடை ஒழியச் சேறும் வாழியோ முதிர்கம் யாமே! தெளிவுரை : பசுமை கெட்டுப் போன மலைப் பக்கத்திலே காய்ந்து கிடக்கும் வள்ளிக் கொடியைப் போலத், தன் புறவழகெல்லாம் அழிவுற்றதாகிப் போயின. தழைந்து தாழ்ந்த கருங்கூந்தலை உடையவரான ஆய மகளிரும், மனம் அழுங்கா நின்றனர். எம் தாயும் தலைவியின் களவொழுக்கமாகிய அதனை அறிந்து விட்டனள். அதேைல, தலைவியை இல்வயிற் செறித்தனளாகி, அரிய காப்பையும் ஏற்படுத்தினள். ஆதலினலே, - வேருகிய பலப்பல நாடுகளின்றும் காற்றுச் செலுத்து தலாலே வந்தடைந்த, பலவான செய்வின்ைச் சிறப்புடைய நாவாய்கள் காணப்படும், எம் தந்தையது பெரிதான கடல் துறையினிடத்தே வைக்கப் பெற்றுள்ள, உண்டாற் செருக்கை மிகுவிக்கும் கள்ளின் சாடியைப் போன்றதான எம்முடைய இளமையது நலமெல்லாம், இல்லத்திடத்தேயே யாகிக் கெட்டு ஒழியும்படியாக யாமும் எம் மனையகத்தே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/202&oldid=774203" இலிருந்து மீள்விக்கப்பட்டது