பக்கம்:நற்றிணை-2.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை 199 செல்லா நிற்போம்! அவ்விடத்திருந்தபடியே அவனைப் பெருதே முதுமையடைந்தும் முடிவை எய்துவோம்! இதனை எமக்கு நேர்வித்த நீதான் நெடிது வாழ்வாயாக! கருத்து : எம்பால் அன்புடையையாயின், நீதான் மணத்தோடு விரைய வந்தனையாய் அவள் நலிவைப் போக்குவாயாக என்றதாம். சொற்பொருள் : முரிந்த சிலம்பு-கோடை வெம்மை யாலே பசுமை நலன் கெட்டழிந்து போய்க் காணப்படும் மலைப்பகுதி. எரிந்த - காய்ந்து பட்ட புறன் - மேற்புறம். ஒலிதல்-தழைத்தல், தாழ்தல்-தொங்குதல். அழுங்குதல். பெரிதும் வருந்திச் சோர்தல். கடி-காவல். கடி அயர்தல். காவலைச் செய்தல். கால்-காற்று. பலவினை நாவாய்-பல வான செய்வினைத் திறன் பெற்ற நாவாய்: பல நாட்டின ஆதலின் அவை பல வினைத்திறன் உடையவாயின. தோன்றும்-வந்து சேர்ந்து காணப்படும். கலி-செருக்கு. மடை-மடுத்தல்-உண்டல். இள நலம்-இளமை ந ல ம். இளமையும் நலமும் என்றும் கொள்ளலாம். சேறும் - சென்றடைவேம். முதிர்கம் முதிர்ந்து போவேம். விளக்கம்: வளமை செறிந்த சிலம்பினிடத்தே பசுமை தோன்றத் திகழ்ந்த வள்ளிக்கொடி, தானும், மழைவளத் தைப் பெருமையினலே காய்ந்து போயிற்ை போல, தலைவியின் துயர்கண்டு அழுங்கிய ஆயமகளிரது ஒலிவரும் தாழிருங் கூந்தலும் எண்ணெய்யிட்டுப் பேணப் பெருமை யிலே அழகழிந்தது என்று கொள்க. சாடியைத் தலைவிக்கும், அதன்பாலுள்ள கள்ளைத் தலைவியது அழகுக்கும் உவமை யாகக் கொள்க. சாடி கண்டாரை இன்புறுத்துவது, தன்னை நாடி வரச் செய்வது, கள் உண்டாரைச் செருக் குறச் செய்து களிப்பது. "முதிர்கம் யாமே என்பது சிந்தனைக்கு உரியது. வேற்று வரைவுக்கும் கற்பிற் சிறந்தாளாகிய தலைவி இசையமாட்டாள் ; களவிலும் நின்னை அடையாள்; நீ தானும் அவளை மணத்தலைக் கருதமாட்டாய் ; ஆகவே, அவள் வருந்தினளாக இளமையும் அழகும் வறிதே கழிய முதிர்ந்து சாவையே அடைவாள் ; அவளுக்கு அணுக்க ராகிய யாமும் அவள் பயின்ற துயரைப் பொறேமாய் அந் நிலையே எய்துவேம்; இத்துணைக்கும் காரணமாகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/203&oldid=774204" இலிருந்து மீள்விக்கப்பட்டது