பக்கம்:நற்றிணை-2.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

N - هي * 200 நற்றிணை தெளிவுரை i) நீ தான் நெடிது வாழ்வாயாக என்கின்றனள். தோழி (0கூற்ருக அமைந்த இச் சொற்களிலே பெருமிதப் பண்பும், வர்ைவுகடாதலும், ஒருங்கிணைந்து மிளிர்கின்றன! வேறு பல் நாட்டிற் கால்தர வந்த பலவினை நாவாய் தோன்றும் பெருந்துறை என்பது, பழந்தமிழ் நாட்டு வாணிக வளத்தை உணர்த்துவதாம். மகளிரது இளமை நலத்தைக் கட்சாடிக்கு உவமித்த நயத்தைச் சிந்தித்து உணர்ந்து களிக்க வேண்டும். r* ^: 296. படர் உழந்து ஒழிதும் ! பாடியவர்: குதிரைத் தறியனர்; குதிரைத் துறையனர் எனவும் பாடம். திணை: பாலை. துறை: தோழியால் பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகள் சொல்லியது. - ((து. வி.) 5ಹಿ.೧! கார்காலத்தேயும் வினைப்பொருட் டாகத் தலைவியைப் பிரிந்து போவதற்குக் கருதியதனைத் தோழி வாயிலாகக் கேட்ட தலைவியானவள், அவளுக்குத் தன் நிலையைத் தெளிவிக்கக் கூறியதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.) - என்ன வதுகொல் தோழி? மன்னர் வினவல் யானைப் புகர்முகத் தணிந்த பொன்செய் ஓடை புண்கலம் கடுப்பப் புழற்காய்க் கொன்றைக் கோடணி கொடியினர் ஏகல் மீமிசை மேதக மலரும் பிரிந்தோர் இரங்கும் அரும்பெறற் காலையும் வினையே கினைந்த உன்ளமொடு துணைஇச் செல்ப என்ப காதலர் $. ஒழிதும் என்பதாம் வருந்துபடர் உழந்தே! தெளிவுரை: ! மன்னர்கட் குரியவான போர் வினையிலே வல்லண்மயுடைய யானையானது, புள்ளிகொண்ட முகத்திலே யணிந்துள்ள, பொன்ற்ை செய்த நெற்றிப் பட்டத்தின் புனைதல் சிறந்த அழகைப்போல, புழல் அமைந்த காய்களைக் கொண்ட கொன்றைமரத்தின் கிளை களிலே கொடிகொடியாகத் தூங்கும் சரக்கொன்றையின் பூங்கொத்துக்கள், பெருமலையின் மிக உயர்ந்த பக்கத்தே, மேன்மைப்பட ம்லரா நிற்கும்! - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/204&oldid=774205" இலிருந்து மீள்விக்கப்பட்டது