பக்கம்:நற்றிணை-2.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 நற்றிணை ெ தளிவுரை தெளிவுரை : தோழி! நீதான் நீடு வாழ்க! தெளிந்த நீருடைய கடலிடத்தே, வலிய கையினரான பரதவர்கள், நேரான கோலையும் வளைந்த முடிகளையும் கொண்ட அழகிய வலைகளை வீசுவர்; அவ்வலை கிழியுமாறு அதனை அறுத்துக் கொண்டு வெளியே சென்று, கடுமையான முரண்பாட்டால், எதிர்ப்பட்டதை எல்லாம் தாக்கியிருந்தது சுரு:மீன் ஒன்று: அத்தகைய சுருமீன் திரிந்தபடியிருக்கும், ஆழ்ந்த நீர்த்துறைக்கு உரியவன் நம் சேர்ப்பன். அவனும், நம் நெஞ்சகத்தான் ஆகவே உள்ளனன். ஆயினும் “ஊரும் ஒலி அவிந்ததாய் அடங்கிற்று. யாமமும் நள்ளென் னும் ஒலியுடையதாயிற்று. நள்ளிரவுப்பொழுதும் வந்தது. ஒசை மிகுந்த நம் பாக்கத்தேயுள்ளவர் யாவரும் அயர்ந்து உறங்கு வாராயினர். நம் மன்றத்துப் பெண்ணை, மிகப் பழங்காலத்தி லிருந்தே கடவுள் தங்கியிருந்து வாழும் பருத்த அடியை உடையது. அதன் வளைந்த மடலிடத்தே, அன்றில்களின் கூடு உள்ளது. தன் துணையோடும் கூடி வாழுகின்ற அன்றிலானது, அக் கூட்டில்லிருந்தபடியே வேட்கைக் குரலை எழுப்புவதையும் தொடர்ந்து கேட்கின்றேம். அதனைக் கேட்கும்போதெல்லாம், கண் உறக்கம் அற்ற வளாய், பிரிவுத் துயரமானது தன்னைப் பெரிதும் வருந்து தலிளுலே மெலிந்து, நம்மையே நினைந்து, நல்ல நெற்றியை உடையவளான நம் காதலியும் வருந்துவாள்' என்று அவன் நினைப்பதுதான் உண்மையாகுமோ? கருத்து நம்மை நினைத்திலர்: ஆதலினலேதான் இது காறும் வந்திற்றிலர் என்பதாம். சொற்பொருள் : தொன்று ைற கடவுள்- பழங்காலந் தொட்டு வந்து தங்கி வெளிப்பட்டு அடியவர்க்கு அருளும் கடவுள்; இன்றும் நெல்லை மாவட்டப் பகுதிகளில் இவ்வாறு பனையின் அடிமரத்தில் கடவுளை நிறுத்தி மக்கள் வழிபடு கின்றனர். தொன்முது கடவுள்' எனவும் பாடம். வாங்கு மடல் - வளைந்த மடல். உயவுக் குரல் - வேட்கைக் குரல். துணை பிரிந்த பறவை தன் துணையைச் சேர்தலை விரும்பிக் கூவி யழைக்கும் துயரக்குரல். வன்கை - வலிய கை. கொடுமுடி - வளைந்த முடி நெடுநீர் - ஆழமான நீர் நெடுகிலும் பரந்துள்ள கடலும் ஆம. உள்ளுறை : அவர் சொல்லாகிய வலைப்பட்டது என் மனம்; அவர்தான் நம்மை மறக்கவும், இப்போது அதுதான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/218&oldid=774220" இலிருந்து மீள்விக்கப்பட்டது