பக்கம்:நற்றிணை-2.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

گونه yo.s நற்றிணை தெளிவுரை (2ր Ե 215 அதனைக் கடந்து வெளிப்பட்டு அவரை நோவதாயிற்று. இதனைக் கொடுமுடி யவ்வலை பரியப் போகிக் கடுமுரண் சுரு வழங்கும் என்பதற்ை பெற வைத்தனர். . விளக்கம் : "நாம் அவர் பிரிவாலே வருந்தி நலிவோம் என்று நினைத்தனராயின், அவர்தாம் இதற்குள் வந்து, நம் துயரைப் போக்கியிருப்பார் அல்லரோ எனப் புலம்புகின்ருள். 'துணையோடன்றித் தனித்து வாழ்தல் இல்லாத இயல்பினது' அன்றில். ஆதலின், துணைபுணர் அன்றில் என்றனள். தன் காதலனினும் அதன் துணை சிறந்தது; சிறுபொழுதும் பிரிந் திருக்காத இயல்பினது என்று எண்ணி வருந்தியதாம். மேற்கோள் : மறைந்தவற் காண்டல் என்னும் பொரு ளதிகார்ச் சூத்திரத்து (111), காமஞ் சிறப்பினும்' என்பதற்கு, இச் செய்யுளை நச்சினர்க்கினியர் மேற்கோள் காட்டுவர். - 304. அவன் மார்பு! பாடியவர் : மாருேக்கத்து நப்பசலையார். திணை : குறிஞ்சி. துறை : வரையாது நெடுங்காலம் வந்தொழுக, ஆற்ருளாகிய தலைமகள், வன்பொறை எதிர் மொழிந்தது. * - ((து. வி.) தலைவன் தலைவியை வரைந்து மணந்து கொள்வதற்கு நெடுநாளாயினபோதும் முயன்றிலன்; கள வின்பத்தையே விரும்பி நாடியவகை, நெடுங்காலம் வந்தும் துய்த்தும் பிரிந்து போவானுயினன்; அவன் வரும் வழியின் ஏதம் முதலியவை குறித்துத் தலைவி வருந்தினள். அத் தலைமகளைத் தோழி பலவாருகத் தேற்றி வந்தனள்; எனினும், துயர நெஞ்சம் பொறுக்கலாற்ருத தலைவி, தன் துயரத்தின் நிலையை இவ்வாறு தோழிக்கு உரைக்கின்றனள்.) வாரல் மென்தினைப் புலவுக்குரல் மாந்திச் சாரல் வரைய கிளையுடன் குழீஇ வளியெறி வயிரின் கிளிவிளி பயிற்றும் களியிருஞ் சிலம்பின் நன்மலை நாடன் புணரிற் புணருமார் எழிலே பிரியின் மணியிடை பொன்னின் மாமை சாயவென் அணிகலஞ் சிதைக்குமார் பசலை யதல்ை 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/219&oldid=774221" இலிருந்து மீள்விக்கப்பட்டது