பக்கம்:நற்றிணை-2.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை Μηή 7 ,3 *{ 217 / -T தொடர்ந்து உயிரையும் வாங்கும் இசைப்பாரின் கைபோன்ற்து தலைவனின் கொடிய மார்பு என்றதால், அவனைப் பிரியின், தான் படும் வேத னை ப் பெருக்கத்தையும் உரைத்தனளாம். விறலோன் - வெற்றியாளன்; வல்லமையாளன்; காதலியை வதைக்கும் விறல்ோன் என்று, மனம் வெதும்பிக் கூறியதும் ஆகும். - - உள்ளுறை : கிளி திணைக்கதிரைக் கிளையோடும் தின்று விட்டுச் சென்று, கூடி விளிபயிற்றும் மலைநாடன்' என்றது, அவ்வாறே தலைவியைக் களவிற்கூடிய தலைவனும், தன் சுற்றத் தார்க்குச் சொல்லி, சான்ருேர் குழுவினருடன் வரைந்து வந்து தன்னை மணந்து கொள்ள வேண்டும் என்பதாம். விளக்கம் : மணியிடை யிடப்பெற்ற பொன்னனது, நீல மணியின் ஒளியால் தன் இயல்பான நிறத்தில் நீலவண்ணங் . கலப்புற்றுத் தோன்றுமாறுபோலத் தலைவியின் மேனியும் பசலை யால் நிறங்கெட்டுத் தோன்றிற்று என்பதாம். மாமை மேனி நிறத்திற்கும்; அணிநலம் மெய்ப் பொலிவுக்கும் சுட்டப் LILL60s. - மேற்கோள் : அவனறிவாற்ற அறியும் ஆதலின் என்னும் தொல்காப்பியப் பொருளதிகாரச் சூத்திரத்தின், ( சூ. 147) 'இன்பமும் இடும்பையுமாகிய விடத்தும் என்பதற்கு, இச் செய்யுளை நக்கினர்க்கினியர் மேற்கோள் காட்டுவர். 305. நோயாகின்ருேம் மகளே! பாடியவர் : கயமனர். திணை பாலை. துறை : (1) நற்ருய் தோழிக்குச் சொல்லியது; (2) மனை மருட்சியும் ஆம். - ((து. வி) (1) தன் மகள், அவள் காதலனுடன் உடன் போக்கில் வீட்ன்டயகன்று சென்று விட்ட்தஞ்லே, தாயின் மனத்துயரம் அளவிறந்து பெரிதாகின்றது. அவ்ஸ் தல்ைவியின் தோழியிடத்தே தன் அவலத்தைச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது (2) பெற்ற தாய், தன் மனையிடத்தேயிருந்து மருண்டு சொல்லியதாகவும் கொள்ள்ப்படும்.) - வரியணி பந்தும் வாடிய வயலையும் மயிலடி யன்ன மாக்குரல் கொச்சியும் ந.-14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/221&oldid=774224" இலிருந்து மீள்விக்கப்பட்டது