பக்கம்:நற்றிணை-2.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 நற்றிணை தெளிவுரை கடியுடை வியன்ககர்க் காண்வரத் தோன்றத் தமியே கண்ட தண்தலையும் தெறுவர நோயா கின்றேம் மகளே! கின் தோழி 5 எரிசினங் தணிந்த இலையில் அம்சினை - வரிப்புறப் புறவின் புலம்புகொள் தெள்விளி உருப்பவிர் அமையத்து அமர்ப்பனள் நோக்கி இலங்கில வென்வேல் விடலையை விலங்குமலை ஆரிடை கலியுங்கொல் எனவே! 10 தெளிவுரை : மகளே! வரிந்து வரிந்து கட்டப்பெற்ற அழகுடன் தோன்றும் பந்தும், வாடிக் கிடக்கும் வயலைக் கொடியும், மயிலது காலடிபோன்ற கரிய பூங்கொத்தையுடைய நொச்சியும், காவலையுடைய நம் அகன்ற மாளிகையிடத்தே கண்ணுக்கு அழகாகவே தோன்றுகின்றன. அவற்ருேடு, அவளை யில்லாதே தனியாகச் சென்று கண்ட குளிர்சோலையும், என்னைப் பெரிதும் வருத்தா நிற்கும். நின் தோழியானவள், கதிரவனின் எரிக்கும் சினமானது தணிந்திருக்கும் மாலைப்பொழுதிலே, இலைகளற்ற அழகிய மரக்கிளையில் அமர்ந்தபடியே, வரிகள் பொருந்திய முதுகுப்புறத்தையுடைய புருக்கள், வருத்த மிகுதி யாலே கூவுகின்ற தெளிந்த கூப்பீட்டொலியையும் கேட்பாள். கேட்டதும், "வெப்ப மிகுந்த பொழுதின்கண்ணே போரிடப் புகுந்தாற் போன்ற கண்களையுடையவளாக, இலங்கிய இலைவடிவான வெற்றிவேலை ஏந்தியபடியே தன்னேடும் உடன் வருகின்ற இளையோனகிய தன் காதலனை உறுத்து நோக்கி, மலை குறுக்கிட்ட கடத்தற்கரியதான வழியிடையே அவனைத் துன்புறுத்துவாளோ?' என்றே. எனக்கு மிகவும் வருத்தம் உண்டாகின்றது காண்! கருத்து : "அவள்தான் அவனோடு இனிதாக வழியைக் கடந்து சென்று மணம்பெற்று நீடு வாழ்வாளாக" என்பதாம். சொற்பொருள் : வரியணி பந்து - வரிந்து வரிந்து கட்டிய அழகிய பந்து; இது அவள் தோழியருடன் பந்து ஆடியிருக்கும் காட்சி நினைவைத் தாய்க்கு உண்டாக்கும். வயலை - வயலைக் கொடி, இது வாடிக்கிடப்பது அதற்கு நீர்விடும் தலைவி அகன்று போயினுள் என்பதை நினைப்பூட்டும். மாக்குரல் நொச்சி தரியபூங் கொத்துக்களையுடைய நொச்சி: இது கருநொச்சி:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/222&oldid=774225" இலிருந்து மீள்விக்கப்பட்டது