பக்கம்:நற்றிணை-2.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை - 219 இதன் நிழலிலே அவள் சிற்றில் இழைத்து விளையாடியிருந்ததை இது_நினைவுபடுத்தும். தண்தல்ை . குளிர்ந்தவிடமான சோலைப் பகுதி, இது அவள் தோழியரோடு கூடியாடிச் சோலை விளையாட்டயர்தலை நினைவுபடுத்தும். தமியேன் கண்ட கண் தலைத்தலை தெறுவர எனவும் பாடபேதம் கொள்வர். தன் மகள் பழகிய இடங்களைப் பார்க்கப் பார்க்கத்தாயின் மனத்தே அவளது பிரிவின் நினைவு மேலெழுதலால், அவள் கொண்ட வருத்தம் மிகுதியாகின்றது. எரிசினம் - எரித்தலாகிய சினம்; சினம் என்றது அனைத்தையும் வெங்கதிர்களால் வாட்டிவருத்தலால். புலம்பு - தனிமைத் துயரம். புலம்பு கொள் தெள்விளி' என்றது "புறவுப் பேடும் தன் துணையைக் காணுதாய்ப் புலம்பியழைக்கும் கூப்பீட்டுக் குரல் என்றதாம். அக் குரலைக் கேட்பவள் ஆணின் பிரிந்துபோகும் கொடுங்குணத்தைக் கருதினளாகத் தன்னுடன் வருவானையும் ஐயுற்றுச் சினந்து நோக்குவாளோ என்றதாம். அது நேராதிருக்குமாக என்று நினைக்கிறது தாய்மை நெஞ்சம். விளக்கம் : நொச்சி மனைக்கண் வேலியிடத்தே வைத்து வளர்ப்பது; அதன் இலைகள் மயிலடிபோலத் தோன்றும் என்பது "மயிலடி யன்ன மாக்குரல் நொச்சி எனவரும் நற்றிணையாலும் (11.5) அறியப்படும். இது ஐவிரல் நொச்சி எனப்படும். இதன் நீழலிலிருந்து பெண்கள் சிற்றில் இழைத்து விளையாடுதலை, "கூழை நொச்சிக் கீழது என்மகள் செம்புடைச் சிறுவிரல் வரித்த, வ ண் ட லும் காண்டிரோ கண்ணுடையீரே' (அகம். 275) என்பதல்ை அறியலாம். மனையிடத்தே மகளைக் காணுது மருண்டு வருந்தும் தாய், அவள் ஒத்த பருவத்து உடன் தோழியிடம் சொல்லிப் புலம்புகிருள். நலியுங் கொல்' என்றது, அத்தகு வெம்மை வழியில் தன்னை அழைத்து வந்த கொடுமையாலே புண்பட்டு அவனை வருத்துவாளோ! என்று கருதிக் கூறியதாம். அவைேடு சென்றவள், அவன் மனம் உவக்க நடந்து, அவனை மணந்து, இனிது இல்லறமாற்றி வாழ்தல் வேண்டும் என்றும், அவர்களுக்குள் மனவேறுபாடு ஏதும் ஏற்படலாகாது என்றும் கவலையடைகின்றது பெற்ற தாயின் தாய்மை நெஞ்சம்! மேற்கோள் : "தன்னும் அவனும் அவளுஞ் சுட்டி' என்று தொடங்கும் தொல்காப்பியப் பொருளதிகாரச் சூத்தி ரத்தின் (சூ. 36), தோழி தேஎத்தும்' என்னும் பகுதிக்கு, இதனை நச்சினர்க்கினியர் எடுத்துக் காட்டி, இது தோழியை வெகுண்டு கூறுவது' என்று உரைப்பர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/223&oldid=774226" இலிருந்து மீள்விக்கப்பட்டது