பக்கம்:நற்றிணை-2.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| t . ."

Ꮼ ; - 队 `222 நற்றிணை தெளிவுரை 307. அவன் துயர் காண்போம்! பாடியவர்: அம்மூவர்ை. திணை : நெய்தல். துறை: குறி நீட ஆற்ருளாகிய தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. ((து-வி.) தலைமகன் குறித்தபடி, குறித்த காலத்தில் வராததால், தலைவியின் பிரிவுத் துயரம் கரைகடந்து பெரி தாகின்றது. அவன் சொற்பிழையாய்ை வருவான்' என்று வற்புறுத்திக் கூறுகின்ருள் தோழி. அவள், அதனை மிகவும் நயமாகச் சொல்வதுபோல அமைந்த செய்யுள் இது.) - கவர்பரி நெடுந்தேர் மணியும் இசைக்கும் பெயர்பட வியங்கிய இளையரும் ஒலிப்பர் கடலாடு விழவிடைப் பேரணிப் பொலிந்த திதலை யல்குல் கலம்பா ராட்டிய வருமே தோழி வார்மணற் சேர்ப்பன் - - 5 இற்பட வாங்கிய முழவுமுதற் புன்னை - மாவரை மறைகம் வம்மதி பாள்ை பூவிரி கானல் புணர்குறி வந்துநம் c. *; மெல்லினர் நறும்பொழிற் காணுதவன் அல்லல் அரும்படர் காண்ககாம் சிறிதே! 10 தெளிவுரை : தோழி! விருப்பந்தரும் செலவைக்கொண்ட குதிரை பூட்டிய, நெடிய தேரினது மணியும் அதோ ஒலிக் கின்றது. பெயர்ந்துபட நடக்கின்ற ஏவல் இளைஞரும் அதோ ஆரவாரிக்கின்றனர். கடலாட்டு விழாவினை முன்னிட்டுப் பெரிய அணிகளாலே பொலிவுற்றிருக்கின்ற, திதலை படர்ந்த நின் அல்குலது நலத்தைப் பாராட்டுதலின் பொருட்டாக, நீண்ட மணல்பரந்த நெய்தல்நிலத் தலைவனும் இன்னே வருவான் கண்டாய்! அவன் இதுகாறும் வாராதாகைக் காலந்தாழ்த்து நம்மையும் வருத்தியவனதலின் இந் நடுயாமத்தே-மலர் விரிந்த கானற் சோலைக் கண்ணே யுள்ள் நாம், அவனைக் களவிலே சேர்கின்ற குறியிடத்திற்கு அவனும் வந்து, மெல்லிய பூங்கொத்துக்களையுடைய நறும் பொழிலினிடத்தே நம்மைக் காணுதவனகி, அவன் படுகின்ற அல்லல் மிகுந்த அரிய அவலத்தையும் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/226&oldid=774229" இலிருந்து மீள்விக்கப்பட்டது