பக்கம்:நற்றிணை-2.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 நற்றிணை:தெளிவுரை செல்வேம் போலவும் தோன்றுகின்றது. கருமையான அடிமரத்தையுடைய வேங்கை மரத்திலே, நாட்காலையிலே பூத்துள்ள புதுப்பூக்கள், பொன்னினலே பணிசெய்யும் கம்மியனின் கைவேலைப்பாட்டினைப்போல், மிகவும் வனப் பினையும் பெற்றன. தடைகளே முற்றவும் அழித்து, தழைத்த பலவாகிய கூந்தலை அழகு பெறுமாறு ஒப்பனை செய்து, காண்பதற்குள்ள விருப்பம்ானது அள்வுகடந்த்தேைல, நம்மை இதுகாலை கைவிட்டுப் போயின நம் காதலருக்கு, நாம்தான் இனி எவ்வாறு உதவுவோமோ? கருத்து : தலைவன், விரைவில் வந்து தலைவியை மணந்து கொண்டு இல்லறம் பேணவேண்டும் என்பதாம். சொற்பொருள் : நாளுறு - நாட்காலத் தோன்றிய. பொன். செய்கம்மியன்-பொற்கொல்லன். கைவினை - கை வேலைத்திறம். தகை வனப்பு - மிகுந்த அழகு. கண்ணழி - தடை. கட்டழித் தல் முற்றவும் ஒழித்தல். கடீஇயாற்கு நீத்துப் போயின வருக்கு. நயவரும் - விருப்பம் வருகின்ற. கூதளம் - கூதாளி. புலம்ப - தனிமையுற, தோடு - தினையின் இலை. கூஉம்தினை - கூவிக் கிளியோப்பும் 9డి 7ు. விளக்கம் : கடீஇயான் என்ருள், தம்மை மறந்து விட்ட அவனது கொடுமையை நினைத்து நொந்து கூறினள். கொய்பதம் கொள்ளும் தினை' என்றதல்ை, இனிப் பகற்குறி வாய்த்தல் அரிதாதல் கூறினள். ஊர்வயின் மீள்குவம்' என்ருள், இரவுக்குறி வேட்டது போலச் சொல்லினும், வரைவு கடாதலே அவள் கருத்தாதலை உணர்த்தினள். வேங்கை பூத்தது கூறியது, அதுதான் மணவினைக்கான காலமும் வந்தது என்பதை உணர்த்தி, இனி இல்லத்தார் அது குறித்து முயலுவர் என்று கூறியதாம். கருங்கால் வேங்கை நாளுறு புதுப்பூப் பொன்செய் கம்மியன் கைவினை கடுப்பத், தகை வனப்பு உற்ற கண்ணழி கட்டழித்து' என்றது, தாம் வரைந்து வரும்வரை பொறுத்திருப்பதாக எண்ணினும், வேங்கை மலர்ந்தது மணவிஒத் காலமாக, அந்த எண்ணம் தடைப்படலும் கூடும் ః இதல்ை, தாம் வருந்தி நலனழிவேம் என்பதும் கூறினளாம். தினை முற்றியது கூறிய தல்ை, இற்செறிப்பு உளவாதலும் கூறினளாம். ஆதலின் இனிப் பகற்குறியும் இரவுக்குறியும் வாய்ப்பதரிது எனவும், விரைய வரைந்து வந்து மணந்து கூடி இல்லறமாற்றலே செயற்குரியது. என்பதும் உணர்த்தினள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/240&oldid=774245" இலிருந்து மீள்விக்கப்பட்டது