பக்கம்:நற்றிணை-2.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ومونموه كـ நெஞ்சு - - - - 'நற்றிணை தெளிவுரை 237 பயன் வேங்கை பூ த் தது மணவினைக்கு உரிய காலமாதலின், விரைவில் மணவினையினைப் பெறுவதற்குத் தலைவன் முயல்வான் என்பதாம். 314. மொழி வன்மையின் பொய்த்தனர்! பாடியவர் : முப்பேர் நாகனர். திணை : பாலை. துறை : பிரிவிடை மெலிந்த தலைமகள் சொல்லியது. ((து . வி.) பிரிந்து போயின தலைவன் திரும்புவதாகக் குறித்துச் சென்ற பருவமும் வந்து கழிந்தது. அவனை வரக் காணுதாளான தலைவியின் துயரமும் பெரிதாகின்றது. அவள் தன் நெஞ்சழிந்து கூறுவதாக அம்ைந்த செய்யுள் இது. ) முதிர்ந்தோர் இளமை ஒழிந்தும் எய்தார் வாழ்நாள் வகையளவு அறிகரும் இல்லை மாரிப் பித்திகத்து ஈரிதழ் அலரி நறுங்காழ் ஆரமொடு மிடைந்த மார்பில் - குறும்பொறிக் கொண்ட கொம்மையம் புகர்பில் 5 கருங்கண் வெம்முலை ஞெழுங்கப் புல்லிக் கழிவதாக கங்குல் என்று தாம் மொழிவன் மையின் பொய்த்தனர் வாழிய கொடிவிடு வன்ன காய்விடு கள்ளி அலங்கலம் பாவை ஏறிப் புலம்புகொள் 10 புன்புரு நீளிடைச் சென்றி.சி னேரே! தெளிவுரை : நெஞ்சமே! காய்கள் நொடித்துவிட்டாற் போல ஒலியோடு தெறிக்கின்ற தன்மையுடையது கள்ளி. அக் கள்ளியின், அசையும் பாவைபோலத் தோன்றும் கிளையிலே ஏறித், தனியே துயருடன் இருந்தது ஆண் புரு ஒன்று. அது தர்ன், 'தான் விரும்பியதன் பெடையைக் புணர்குறிப்போடு கூவி அன்ழத்தபடியே இருக்கும், வெயிலின் வெம்மையானது சற்றும் குன்ற்யாது நீண்டபடியிருக்கின்ற, அத்தகைய சுரத் தின் கண்ண்ே, நம்மைப் பிரிந்தும் சென்றவர் நம் தலைவர். அவர்தாம்- - யாக்கை மூத்துத் தளர்ந்தவர் மீளவும் இளமைப் பருவத் தைத் தவறியும் அடைபவர் அல்லர் வாழ்நாளின் வகுத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/241&oldid=774246" இலிருந்து மீள்விக்கப்பட்டது