பக்கம்:நற்றிணை-2.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 நற்றிணை தெளிவுரை எயிறேர் பொழுதின் எய்தரு வேமெனக் கண்ணகன் விசும்பின் மதியென உணர்ந்தகின் 5 கன்னுதல் விேச் சென்ருேர் கல்கசை வாய்த்துவரல் வாரா அளவை அத்தக் கல்மிசை யடுக்கம் புதையக் கால்வீழ்த்துத் தளிதரு தண்கார் தலைஇ விளியிசைத் தன்ருல் வியலிடத் தானே! 10 தெளிவுரை : தோழி! கயல்மீன்போன்ற மையுண்ட கண்களையும், கனவிய குழையையும் உடையவளே! மலரை யுடைய முகையை அழகுதோன்றக் காட்டியபடி, இம் முல்லையானது நின் பற்களைப்போலத் தோற்றும். அரும்புகள் ஈனுகின்ற அத்தகு பொழுதிலே, யாமும் நின்பால் வந்தடைவேம் என்று நமக்குத் தேறுதல் கூறிப் பிரிந்து போயினவர் நம் தலைவர். இடம் அகன்ற வானத்தினிடத்தே உள்ளதான நிலவோ என்னுமர் அமைந்த, நின் முகத்திடத்தேயுள்ள நறிய நுதலைத் தடவிவிட்டபடியே, நினக்கு ஆறுதலும் கூறிச் சென்றவரும் அவர். அவர்தாம், நம்மை வந்தட்ையும் விருப்பின ராகி, நம்பாலே வந்து சேராததன் முன்பாகவே-இக் கால மல்லாக் காலத்திலேயும் சுரத்து நெறியையுடைய மலையின்மேலே, அதன் பக்கவிடம் எல்லாம் மறையும்படியாகக் காலிறங்கி, நீர்த்துளிகளையும் பெய்வதாய், தண்ணிய மேகமானது, அகன்ற வானத்திடத்தே இடிமுழக்கத்தையும் மேற்கொள்ளா நின்றது. ஆதலினலே, நீலமணியைப் போலும் நிறத்தை உடையதான இம்மேகமும் மிக்க அறியாமை உடையது, காண்பாயாக! கருத்து அவர்தாம் தம் சொற் பிழையாதவராய், குறித்த காலத்தே மீண்டு வருவர்; நீதான் அதுவ்ரை தேற்றி இருப்பாயாக’ என்பதாம். சொற்பொருள் : மடவது - மடமை. உடையது; மடமை யாவது குறித்த காலத்தின் வரவுக்கு முற்பட வந்த அறியாமைச் செயல். மணி - நீலமணி. மெளவல் - முல்லை. கண்ணகன் - இடம் அகன்ற, நீவி - தடவி, தடவுதல் அன்பினைக் காட்டுதற்கான செயல். நசை - விருப்பம்: நல் நசையாவது நமக்கு நன்மை செய்தல் வேண்டுமென்னும் விருப்பம். வாரா அளவை - வாராததன் முன்பேயே, அடுக்கம் - மலையடுக்கம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/246&oldid=774251" இலிருந்து மீள்விக்கப்பட்டது