பக்கம்:நற்றிணை-2.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248. - நற்றிணை தெளிவுரை சிறை காவலுக்கும் உட்படுத்தினுள், ஆங்கு அவளை நினைந்து வந்த அவன், அவள் நிலையை அறிந்தான். நள்ளிரவிலும் துயில் பெருதவனக வருந்தும் அவன், தன் உளத்திற்குக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.) ஒதமும் ஒலிஒ வின்றே ஊதையும் தாதுளர் கானல் தெளவென் றன்றே மணல்மலி மூதூர் அகல்நெடுந் தெருவில் கூகைச் சேவல் குரலோடு ஏறி ஆரிரும் சதுக்கத்து அஞ்சுவரக் குழறும் 5 அணங்குகால் கிளரும் மயங்கிருள் நடுநாள் பாவை யன்ன பலராய் வனப்பின் தடமென் பணத்தோள் மடமிகு குறுமகள் சுணங்கணி வனமுலை முயங்கல் உள்ளி மீன்கண் துஞ்சும் பொழுதும் 10 ய்ான்கண் துஞ்சேன் யாதுகொல் கிலேயே! தெளிவுரை : கடலும் ஒலியடங்கி விட்டதே ஊதைக் காற்ருனது மகரந்தத்தைக் கிண்டும் கழிக்கரைச் சோலையும் அழகிழந்து போயிற்றே! மணல்மிகுந்த இப் பழையவூரின் அகன்ற நெடிய தெருவிலே, கூகைச் சேவலானது, அதன் பெட்டையோடும் கூடியதாகச் சென்று, மக்களியக்கம் அற்றுப் போயினதான பெரிய நாற்சந்தியிடத்தே, கேட்போர்க்கு அச்சம் வரும்படியாகக் குரலெடுத்துக் குழறி நிற்கும்! அணங்கு களும் வெளிப்பட்டவாய் எம்மருங்கும் உலவியபடியிருக்கும்! இருளும் ஒருவரையொருவர் அறிதற்கும் ஏலாத வகையில் மயக்கந்தரும் அடர்ந்த இருளாயிருக்கும். இத்தகைய இரவின் நடுயாமப் பொழுதிலே கொல்லிப் பாவையைப் போன்ற பலராலும் ஆராயப் படும் அழகினையும், அகன்ற மென்மைவாய்ந்த பருத்த தோள் களையும், மிகுதியான மடப்பத்தையும் உடையவளான இள மடந்ததையினது, சுணங்குகளாலே அழகுபெற்ற வனப்பு வாய்ந்த கொங்கைகளைத் தழுவுதலை எண்ணியவகை, மீன்களும் கண்ணுறங்கும் பொழுதிலும், யான் கண்துஞ்சா தேனய் உள்ளேனே! என் நிலைதான் இனி யாதாகுமோ! கருத்து : 'அவளை இனி முயன்று உடனே மணந்து கொள்வேன்' என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/252&oldid=774258" இலிருந்து மீள்விக்கப்பட்டது