பக்கம்:நற்றிணை-2.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 நற்றிணை தெளிவுரை ((து-வி.) வினை.வயிற் பிரிந்து சென்ற தலைவன், வினை முடிந்தபின், தன் வீடுநோக்கித் திரும்புகின்ருன். அவன் நினைவு முற்றவும் அவன் மனைவியிடத்தேயே செல்லுகின்றது. அவன், தன் பாகனிடத்தே, தேரை விரைவாகச் செலுத்தும் படி கூறுவதாக அமைந்த செய்யுள் இது.) செங்கிலப் புறவின் புன்மயிர்ப் புருவை பாடின் தெண்மணித் தோடுதலைப் பெயரக் கான முல்லைக் கயவாய் அலரி பார்ப்பன மகளிர் சாரற்புறத் தணியக் கல்சுடர் சேருங் கதிர்மாய் மாலைப் 5 புல்லென் வறுமனே நோக்கி மெல்ல வருந்துங் கொல்லோ திருந்திழை அரிவை வல்லக் கடவுமதி தேரே சென்றிக குருந்தவிழ் குறும்பொறை பயிற்றப் பெருங்கலி மூதூர் மரந்தோன் றும்மே. 10 தெளிவுரை : செம்மண் நிலத்தையுடைய காட்டினிடத்தே, புல்லிய மயிரையுடைய யாடுகளின், தெளிந்த இனிய ஓசை யுடைய மணிகள் கழுத்திலே கட்டப்பெற்ற கூட்டம் எல்லாம், தாம் மேய்வதனை விட்டுத் தொழுவம் சென்று புகுமாறு ஊரைநோக்கிப் பெயரா நிற்கும். கானத்தின் கண்ணுள்ள முல்லையின் அகன்ற வாயையுடைய மலரினைச், சாரலின் புறத்துள்ள பார்ப்பன மகளிர் பறித்துச் சூடா நிற்பர். ஆதித்தன் அத்தமனக் குன்றினைச் சேருகின்றதான, கதிரவன் ஒளி மழுங்கிய அத்தகைய மாலைப் பொழுதிலே திருத்தமாகச் செய்த கலனணிந்தவளான என் காதலி யானவள், யான் இல்லாமையாலே பொலி விழந்துபோன வறிய மாளிகையை நோக்கியவளாக, மெல்ல வருத்தங் கொண்டிருப்பாளோ? - பாகனே! குருந்த மரங்கள் மலர்கின்ற காட்டினிடத்தே நெருங்குதலும், பேரொலியுடைய நம் ஊரிடத்துள்ள மரங் கள் தோன்ருநிற்கும். நம் தேரையும் விரைவாகச் செலுத்திச் சென்றனையாய், அவ்விடத்தைச் சென்றடைவாயாக! கருத்து : "அவள்பால் விரையச் சென்றடைதலை நெஞ்சம் விரும்பிற்று' என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/256&oldid=774262" இலிருந்து மீள்விக்கப்பட்டது