பக்கம்:நற்றிணை-2.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

یو ٹر&ہ v، ہ v یا n-yیہ ب4 مع4 و ده ها به دو إمام طو6 ち t * ۴ حیدر k وی دولت ام۱% گ / ۱ یا راه ما ٹگ تمہید، ہم ہو، جی... ۔ 0AAAAA SSAAAAS STTTT TTTTT i Tा - 322 வயப்புலி ஒடுங்கும் நாடன் பாடியவர் : மதுரைப் பாலாசிரியன் சேந்தன் கொற்றனர். திணை : குறிஞ்சி. துறை : 1. தோழி சிறைப்புறமாகச் சொல்லியது; 2. தலைமகன் பாங்கிக்கு உரைத்ததுTஉமாம். ((து-வி.) 1. களவு ஒழுக்கத்தைக் கைவிட்டுத் தலைவனைத் தலைவியை மணந்து கொள்ளுமாறு விரைவுபடுத்த வேண்டும் என்று கருதுகின்ருள் தலைவியின் தோழி. அவன், ஒரு நாள் வந்து சிறைப்புறத்தானுகுதலை அறிபவள். அவன் கேட்டு உணருமாறு, தலைவிக்குச் சொல்வாள்போல அமைந்த செய்யுள் இது, 2. தலைமகன், தலைமகளின் பாங்கிக்குத் தங்கள் உறவுக்கு உதவவிரும்பிக் கூறியதும் ஆம்) ஆங்கனம் தணிகுவது ஆயின் யாங்கும் இதனிற் கொடியது பிறிதொன் றில்லை வாய்கொல் வாழி தோழி வேயுயர்ந்து எறிந்துசெறித் தன்ன பிணங்களில் விடர்முகை ஊன்தின் பிணவின் உட்குபசி களைஇயர் 5 ஆளியங்கு அரும்புழை ஒற்றி வாள்வரிக் கடுங்கண் வயப்புலி ஒடுங்கும் நாடன் தண்கமழ் வியன்மார்பு உரிதினிற் பெருது கன்னுதற் பசந்த படர்மலி அருநோய் அணங்கென உணரக் கூறி வேலன் 10 இன்னியங் கறங்கப் பாடிப் பன்மலர் சிதறியர் பரவுறு பலிக்கே. தெளிவுரை : தோழி, வாழ்வாயாக! மூங்கில்கள் உயரமாக வளர்ந்துள்ளன. வெட்டிச் செறித்து வைத்தாற்போலப் புதர்கள் பின்னிக் கிடக்கின்றன. அத்தகைய மலைப்பிளப்பை அடுத்துள்ள துறுகல்லிடத்தே, ஊனைத் தின்னுகின்ற பெண்புலி யானது மிகுந்த பசிப்ால் துடித்தபடி இரு ந் த து. அதன் பசியைப் போக்குதற்கு விரும்பியது அதன் ஆண்புலி. மக்கள் சென்று வருதலையுடைய நுழைதற்கு அரிதான சிறு வழியை அடுத்துச் சென்று, வாள்போன்ற கோடுகளையும் கொடிய கண்களையுமுடைய வலிமையான அப் புலியானது, பதுங்கியிருக்கும். அத்தகைய நாட்டிற்குரியவன் தலைவன். அவனுடைய தண்மை கமழுகின்ற பரந்த மார்பினைத் தனக்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/258&oldid=774264" இலிருந்து மீள்விக்கப்பட்டது