பக்கம்:நற்றிணை-2.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை 271 அவரும், பசிய நொடியணிந்த புதல்வியரோடு புதல்வரையும் நினக்குப் பெற்றுத்தந்து, நன்மை பொருந்திய கற்புடைமை யுடனே, எம்பக்கத்தவராக ஆகுதல் என்பதோ அதனினும் அரிதாகும். இதனை நீயும் அறிந்தாய் அல்லையோ! - கருத்து: பரத்தையராகிய அவர்பால் விருப்புடைய நின்னைத் தழுவி மகிழ்தல் எம்முடைய செவ்விக்கு மாசாவது என்று இடித்துக் கூறியதாம்: சொற்பொருள் : தட மருப்பு - வளைந்த கொம்பு. பிறழ்சுவல் - அசைந்து பிறழும் பிடரியிடம்; பினர் சுவல் எனப் பாடங்கொண்டு சருச்சரையுடைய பிடர் என்றும் கூறுவர். நாள் தொழில் - நாட் காலையிலே செய்த உழுதொழில். சேட்சினை இருள்புனை மருது - நெடிய கிளைகளோடு இருள்போல அடர்ந்த நிழலைக்கொண்டதான மருதமரம். யாணர் - புது வருவாய். மாணிழை மகளிர் மாண்பான இழைகள் பூண்ட பரத்தையர்; இது எள்ளல் உவமை. எம்மனை - எம் மனைப் புறம்: இது தலைவன் வீடாயினும், அதற்கு உரியவள் மனைவியே என்னும் மரபுபற்றிக் கூறியதாம். புன்மனம் - புன்மை வாய்ந்த மனம்; நன்மனத்திற்கு எதிரானது இது. நன்றி . நன்மை. எம்பாடு - எம் பக்கல்: எமக்கு இணையான தகுதி பெறல். - - - உள்ளுறை : எருமைக் கடா நாரையினம் இரியப் பொய் கையிலே புகுந்து தன் வருத்தம் தீர்ந்தபின், தான் புகுதற் குரியதான தன் தொழுவம் புகுந்து தங்காது, இன்னிழல் மருத நீழலிலே தங்கும் ஊரன் என்றனள். இவ்வாறே தலைவனும் பரத்தையர் சேரியிற் புகுந்து, அதனல் காமக்கிழத்தியர் வெருவி ஒதுங்கி அகன்று போக, பின்னும் வீடு திரும்பாது, பாணன் கூட்டிய புதுப்பரத்தையுடன் தங்கியிருந்தனன் என்று தலைவனைக் குறிப்பாற் சுட்டிப் பழிக்கின்றனள். இங்கு நினக்கு வேண்டியதுதான் இனி யாதுமில்லை என்றதாம். விளக்கம் : "பிறரும் ஒருத்தியை எம்மனைத் தந்து, வதுவை அயர்ந்தனை' (46) என அகத்தினும் வருவதால், இவ்வாறு காம மீதுார்ந்த தலைவர்கள் சிலபோது பரத்தையைத் தம்மனைக்கே கொண்டுவந்து வைத்துக் கூடிமகிழ்வதும் உண்டென்பது புலனாகும். எனினும், பொருளே அவர்தம் குறியாதலால் அவர் உண்மையன்பினர் ஆதல் அரிதென்றும், மற்று அவரும் மகப்பெற்ருலும் அம் மக்கள் மனைவிக்குப் பிறந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/275&oldid=774292" இலிருந்து மீள்விக்கப்பட்டது