பக்கம்:நற்றிணை-2.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 e ( i,o)

"நற்றின தெளிவுரை

.} استان - اساس س-سم-- 206. கேண்மை அறிந்தாளோ? பாடியவர் ! ஐயூர் முடவனும் திணை : . ... துறை : தலைமகன் சிறைப்புறத்தின்னகத் தோழி சொல்லியது. ((து.வி.) தலைவன் தலைவியரின் நீடித்த களவு ஒழுக்கத்தை நிறுத்தித் தலைவனை அவளை வரைந்து கொள்ளும் முயற்சிக்குத் தூண்டவேண்டும் எனக் கருது கின்ருள் தோழி. தலைவனுக்காகத் தலைவி குறியிடத்தே காத்திருக்கும் சமயம், அவன் வந்து, தான் அகலுதலை நோக்கி ஒருசார் மறைந்து நிற்றலை அறிந்தவள். அறியாதா ளாகக் காட்டித் தலைவிக்குக் கூறுவதுபோல அமைந்த செய்யுள் இது. கேட்கும் தலைவன் வரைந்து மணத்தொடு கொள்ளற்கு முற்படுவான் என்பது இதன் பயன்.) 'துய்த்தலைப் புனிற்றுக்குரல் பால்கொள்பு இறைஞ்சித் தோடுதலைப் பிரிந்தன எனல் என்றும், துறுகல் மீமிசைக் குறுவன குழிஇச் செவ்வாய்ப் பாசினம் கவருமென் நவ்வாய்த் தட்டையும் புடைக்கக் கவனும் தொடுக்கென 5 எங்தைவக் துரைத்தன ளுக, அன்னையும் நன்னுள் வேங்கையும் அலர்கமா இனியென என்முகம் நோக்கினள் எவன்கொல் தோழி: சென்றி கென்னுங்கொல் செறிப்பல் என்னுங்கொல்? கல்கெழு நாடன் கேண்மை 10 அறிந்தனள் கொல்லல் தறிக்லேன் யானே! தெளிவுரை : தோழி! துய்யினைத் தலையிலே கொண்ட மிக்க இளமையான தினேக் கதிர்க் குலேகள் பால்கொண்டு தலைசாய்த்து, மூடியிருந்த தோடுகள் பிரிந்துபோயின வாயின என்றும்; துறுகற் பாறைகளின் மேலாகத் தினேக்கதிர்களைக் கொய்துபோகும் பொருட்டாகக் கூடியிருந்த சிவந்த வாயை யுடைய பசிய கி. யினங்கள் தினேக்கதிர்களைக் கவர்ந்து போதலும் நேருமென்றும்; அவற்றை ஒட்டும் பொருட் டாகப் புனத்திடைச் சென்று தட்டையையும் புடைப் பீராக, கவண் கற்களையும் தொடுத்து எறிவிராக என்றும்; எம் தந்தை வந்து தாயிடத்தே உரைத்தனன். அதனைக் கேட்டாளான எம் அன்னேயும், திருமண நன்னளைக் காட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/28&oldid=774304" இலிருந்து மீள்விக்கப்பட்டது