பக்கம்:நற்றிணை-2.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ما (كويه لا وعاق به لم يهدد ژیم که به كام دوك f _2, ... 6 நற்றிணை தெளிவுரை தான, இல்லற வாழ்வியலின் நாட்டத்தைப் புலப்படுத்தற்கு என்றும் கருதலாம். தலைநாள் - முதல் நாள்; அவர்கள் ஒன்று கூடிய நாளாதலால் தலையாய சிற்ந்த நாள் எனினும் பொருந்தும். பயன்: தலைவன் விரைந்து திரும்பத் தலைவியும் மீண்டும் புதுநலன் அடைவாள் என்பதாம். 333. ஒண்சுவர்ப் பல்லி பாடியவர் : கள்ளிக்குடிப் பூதம் புல்லனர். திணை : பாலை. துறை : பொருள்வயிற் பிரிவின்கண் ஆற்ருளாகித் தலைமகளைத் தோழி வற்புறுத்தது. ((து-வி.) தலைமகன் வரைபொருள் தேடுதலின் பொருட் டாகப் பிரிந்து போயிருந்த காலத்தில், அந்தப் பிரிவினைத் தாங் காதவளாக வெம்பி வாடுகின்ருள் தலைவி. அவளுக்கு, அவ்ன் குறித்தபடி வருவான் என்று தோழி தேறுதல் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.) . மழைதொழில் உலந்து மாவிசும்பு உகந்தெனக் கழைகவின் அழிந்த கல்லதர்ச் சிறுநெறிப் பரலவல் ஊறல் சிறுநீர் மருங்கின், பூநுதல் யானையொடு புலிபொருது உண்ணும் சுரனிறந்து அரிய என்னுர் உரன்இழிந்து, 5 உள்மலி நெஞ்சமொடு வண்மை வேண்டி, அரும்பொருட்கு அகன்ற காதலர் முயக்கெதிர்ந்து திருந்திழைப் பணத்தோள் பெறுநர் போலும்; நீங்குக மாதோ கின் அவலம்-ஒங்குமிசை உயர்புகழ் கல்லில் ஒண்சுவர்ப் பொருந்தி 10 கயவரு குரல பல்லி, நள்ளென் யாமத்து உள்ளுதொறும் படுமே. தெளிவுரை : தோழி! உயர் வான இடத்திலே, உயர்ந்த புகழையுடைய நல்ல வீட்டிலுள்ள ஒளியுடைய சுவரினிடத்திலே பொருந்தியிருந்து, மீண்டும் கேட்கும் விருப்பம் வருதலைக்கொண்ட குரலையுடைய பல்லியானது, நம் காதலரை இரவின் நடுயாமப்பொழுதிலும் துயில் பெருதிருந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/280&oldid=774306" இலிருந்து மீள்விக்கப்பட்டது