பக்கம்:நற்றிணை-2.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| ( شده هي -+ '(*•. tيه خ βρή நற்றிணை தெளிவுரை 289 கருத்து அன்ன அறிந்தால் இற்செறிப்பு நிகழும்: ஆதலின், இனிக் களவுறவு வாயாது, கடிமணமே செய்தற்கு உரியது என்பதாம். சொற்பொருள் : தோலா. தோல் வி கண்டறியாத. அலர்வது அலராகிப் பிறரால் துாற்றப்படுவது. இது. இத்த உறவு. நன்றும் புலரா நெஞ்சம் - வருவது நன்ருகும் என்ற நினைவே தோன்ருது, தீமை வரவையே நினைந்து நலியும் மனம். புதுவ - புதிதான பேச்சுக்கள். பருவரல் வெள்ளம் - துன்பமாகிய கடல். சிறந்த சீர் கெழு வியல் நகர் - சிறந்த சிறப்புகள் நிரம்பிய பெரிய அரண்மனை. தொடையல் - மார்பிலே அணியும் மாலை; தொடுக்கப்படுவதால் தொடையலாயிற்று. பெதும்பை பருவம் குறித்தது. கஞலிய கலந்து நிறைந்த, வெறி - மணம். வேலி - சுற்றிலுள்ள எல்லைக் காப்பு. மணிச் சுனை - அழகிய சுனை. தெண்நீர் மணிச்சுனை - தெளிவான நீரானது கருமணிபோலத் தோன்றும் சுனையும் ஆம். சுனை - மலைப்பள்ளத்து நீர்த் தேக்கம். விளக்கம் : நாளை, சுனை ஆடின், மகளிர் பண்பு என்னே' என்ருேளே; என்று அன்னை கூறியதாகச் சொன்னது, தலைவியின் மேனியிலே புணர்ச்சியால் நேர்ந்த மாற்றத்தைச் சுனையாடியதால் வந்தவென்று தோழி கூறியதுகேட்டு, அன்னை நகையாடி, நாளைக்கு நீராடினலும் இவ்வாறு இன்னும் புது மாற்றம் நேருமோ என்று, கேலியாகக் கூறியதாகக் கொள்க. இனி, மணந்து கூடுதலே செயத்தக்கது என்பதாம். பாடபேதங்கள் : புலவா நெஞ்சமொடு, மின்னேர் ஒதி. பயன் : அன்னை அறிந்தாளெனச் சொன்னதால், இனி தலைவி இற்செறிக்கப் படுவர்ளாகவே, அவளை மணங்கொண் டன்றிக் கூடியின்புறல் வாய்ப்பதரிது என்பதாம். 340. புலத்தலும் இல்லேன்! பாடியவர்: நக்கீரர். திணை : மருதம். துறை : பரத்தை யின் மறுத்தந்த தலைமகனைத் தலைமகள் நொந்து சொல்லியது. ((து . வி.) தலைமகன், பரத்தை மோகத்தால் தலைவியை மறந்து சிலகாலம் சுற்றியவன், மீண்டும் தன் தலைவியின் உறவை நாடி வருகின்ருன். அவன் செயலைப் பாராட்டாது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/293&oldid=774333" இலிருந்து மீள்விக்கப்பட்டது