பக்கம்:நற்றிணை-2.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 நற்றிணை தெளிவுரை மறந்து, அவனிடம் மாருத அன்புடைய தலைவியானவள், அவன் செயலுக்கு மனம் நொந்து கூறியதாக அமைந்த செய்யுள் இது சிறப்பிக்கப் பெற்ருேர் : செழியன், வாணன்.) புல்லேன் மகிழ்க! புலத்தலும் இல்லேன்கல்லா யானைக் கடுந்தேர்ச் செழியன் படைமாண் பெருங்குள மடைநீர் விட்டெனக் காலணந்து எதிரிய கணக்கோட்டு வாளை அள்ளலம் கழனி உள்வாய் ஓடிப் 5 பகடுசேறு உதைத்த புள்ளிவெண் புறத்துச் செஞ்சால் உழவர் கோற்புடை மதரிப் பைங்காற் செறுவின் அளமுதற் பிறழும் வாணன் சிறுகுடி அன்ன என் கோள்நேர் எவ்வளை நெகிழ்த்த நும்மே! 10 தெளிவுரை : மகிழ்நனே! பாகனின் குறிப்புக்கு இசைந்து நடப்பதற்குக் கற்றறியாத இளங்களிற்றைப் போன்றவன், விரையச் செல்லும் தேரினையுடைய செழியன். அவனுடைய படையினைப்போலப் பரப்பினலே மாட்சிபெற்றது பெருங் குளம் ஒன்று. அது மிக்குப் பெருகியதனலே, மடையைத் திறந்து நீரைப் புறம்போக விட்டனர். அதனலே, கால்வாயை அடைந்து எதிரிட்டு வருவதாயிற்று, திரண்ட கொம்பினையுடை வாளை மீன் ஒன்று. அதுதான், சேற்றையுடைய அழகிய வயலின் உட்புறத்தேயாகப் பின்னர் ஒடியும் சென்றது. உழும் பகடுகள் சேற்றினைக் காலால் உதைத்தலாலே தெறித்த சேற்றுத் துளிகள் காய்ந்து வெண்ணிறப் புள்ளிகளாக உடலிலே தோன்ற, செவ்விய சாலினை மடக்கி உழுகின்ற உழவர்களின் கைக்கோலால் அடிக்கப்படுவதற்கும் அதுதான் அஞ்சிற்றில்லை. பசுமை பொருந்திய வயலின் வரம்பிடத்தே சென்று, அதன் அடிப்பக்கத்திலேயே புரண்டபடி யிருந்தது. இத்தகைய வளம் கொண்டது வாணனின் சிறுகுடி' என்னும் ஊர். அவ்வூரின் வளமை போன்ற, என்னுடைய கொள்ளுதல் பொருந்திய ஒளிகொண்ட வளைகளைப் பிரிவுத் துயரால் நெகிழச் செய்தவர் நீர். நும்மை, யான் தழுவுதலையும் செய்யேன்: ஆனல், வெறுத்தேனும் அல்லேன். கருத்து : புலத்தலும் இல்லேன்' என்றதால், அவன் முற் பட்டு வந்து தழுவ, அவளும் இசைந்து தழுவுவாள் என்பதாம். /

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/294&oldid=774335" இலிருந்து மீள்விக்கப்பட்டது