பக்கம்:நற்றிணை-2.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை 297 முல்லை தாய கல்லதர்ச் சிறு நெறி அடையா திருந்த அங்குடிச் சீறுர்த் தாதெரு மறுகின் ஆபுறங் தீண்டும் கெடுவீழ் இட்ட கடவுள் ஆலத்து உகுபலி அருந்திய தொகுவிரற் காக்கை 5 புன்கண் அந்திக் கிளைவயின் செறியப் - படையொடு வந்த பையுள் மாலை இல்லைகொல் வாழி-தோழி!-கத்துறந்து அரும்பொருட் கூட்டம் வேண்டிப் பிரிந்துறை காதலர் சென்ற நாட்டே! 10 தெளிவுரை : தோழி, வாழ்வாயாக! முல்லைக் கொ யான் ཝཱ་ལཱ་ཀྱཱ་༔ படர்ந்திருக்கின்ற, கல்லிடைப்பட்ட சிதி: வழியின. அடையாதே இருந்த அழகான குடிகளையுடைய சிற்றார். அச் சிற்றாரிடத்து பூந்தாதுகள் வீழ்த்து மக்கி எருப்போலக் கிடக்கின்ற தெருவினிடத்தே, பசுக்களின் முதுகைத் தீண்டுகின்ற நெடிதான விழுதுகள்ை இட்டுள்ளது. கடவுள் உறையும் ஆலமரம் ஒன்று. அந்த ஆலமரத்திலே இருந்தபடி, அம் மரத்தடியிலே அக் கடவுளுக்குப் படைத்த பலிச்சோற்றைத் தின்ற, தொகுதியான விரல்களையுடைய காக்கையானது, துன்பந் தருகின்ற மாலைக் காலத்திலே, அவ்விடம் விட்டுநீங்கித் தன்னுடைய சுற்றமிருக்கும் இடத்தைச் சென்று அடையும். பிரிந்தான்ர வருத்தும் படைத்துணையோடு. வந்துள்ள, நோயைச் செய்யும் இம் மாலைக் காலமானது, நம்மைக் கைவிட்டு, அருமையான் பொருளின் கூட்டத்தை விரும்பிப் பிரிந்து சென்றுள்ளவரான நம் காதலர் தங்கி யிருக்கும் வேற்று நாட்டிடத்தேயும் உண்டாவதில்லையோ? கருத்து நம்மைப் பிரிந்து வாழும் தலைவர், இம் மாலை வேளையில்ே நம்போல் துயருற்றிருப்பின், விரைந்து நம்பால் வந்திருப்பாரே என்பதாம். சொற்பொருள் : தாய, தாவிப் படர்ந்துள்ள. கல்லதர் - கல்லிடைப் பட்ட வழி: மலைவழியும் ஆம். அடையாதிருந்த . அடைக்காதே கவலையற்றிருந்த: அடையாதிருந்தது அவர் எந்த ஆபத்தையும் அவ்வழியே எதிர்நோக்காததால். தாதெருமறுகு - தாதாகிய பூந்துகள் வீழ்ந்து காய்ந்து எருவாகிக் கிடக்கும் தெரு கடவுள் ஆலம் கடவுள் குடியிருக்கும் ஆலமர்ம்: pーl9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/301&oldid=774353" இலிருந்து மீள்விக்கப்பட்டது