பக்கம்:நற்றிணை-2.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 நற்றிணை தெளிவுரை இளமை தீர்ந்தனள் இவளென வளமனை அருங்கடிப் படுத்தன யாயினும் சிறந்திவள் பசந்தனள் என்பது உணராய் பல்நாள் எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி வருந்தல் வாழி-வேண்டு, அன்னை கருத்தாள் 5 வேங்கையம் குவட்டிடைச் சாந்தின் செய்த களிற்றுத்துப்பு அஞ்சாப் புலியதள் இதணத்துச் சிறுதின வியன்புனம் காப்பின் பெறுகுவள் மன்னே என் தோழிதன் கலனே. தெளிவுரை : அன்னய்! வாழ்வாயாக! யான் சொல்லப் போகும் இதனையும் கேட்பாயாக இவள்தான் தன்னுடைய பெதும்பைப் பருவமாகிய இளமைபிற் கழிந்து விட்டனள் என்று நினைத்து, நம் வளமான வீட்டிலே வைத்து அரிய காவலுக்கு உட்படுத்தின. என்ருலும், இவள் தன் பழைய அழகிலே சிறப்படைந்தாளல்லள்; மேலும் பசலை நோயை மிகுதியாக அடைந்தனள் என்பதை உணர்ந்தாய் அல்லை. பல நாட்களாகவே துயரமுற்ற நெஞ்சத்தைக் கொண்டனையாகித் தெய்வத்தைப் பேணிப்பேணி வருந்தாதே இருப்பாயாக. கருமையான அடியையுடைய வேங்கை மரங்கள் நிரம்பிய அழகான குன்றத்திடத்திலே, சந்தன மரத்தாலே செய்த, களிற்றியானையின் வலிமைக்கும் அஞ்சாத புலியினது தோலாலே வேயப்பட்டுள்ள கட்டுப்பரணிடத்தே சென்றிருந்து, சிறிய தினைகளையுடைய பெரும்புனத்தை மீண்டும் காத்திருப் பாளானல், என் தோழியாகிய இவளும், தன் அழகினை மீண்டும் அடையப் பெறுவாளே! அதற்கு ஏற்பாடு செய்க என்பதாம். கருத்து : இவள் மாற்றம் புனங்காவலின்போது ஏற்பட்ட காதலின் விளைவென்பதைக் குறிப்பால் உணர்த்தியதாகும். சொற்பொருள் : இளமை - இளமைப்பருவம்; இங்கே இது பெதும்பைப் பருவத்தைக் குறிக்கும். கடி - காவல். எவ்விம். துன்பம். தெய்வம் - தெய்வம் என்ற பொதுச் சொல்லாயிருப் பினும், குறிஞ்சித் தெய்வமாகிய முருகனை வேட்டு வெறி அயர்தலாகவே கொள்க. குவடு - குன்று; கவட்டிடை என்பதும் பாடம்; அப்போது வேங்கைமரத்தின் இரண்டு கிளைகளாகப் பிரியும் கவடுபட்ட பகுதியிலே கட்டிய ப்ரண் என்று கொள்க. சாந்தில் - சந்தன மரத்தில். புலியதள் - புலித்தோல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/318&oldid=774391" இலிருந்து மீள்விக்கப்பட்டது