பக்கம்:நற்றிணை-2.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}^ 3 49 | 315 డచి-వ ۷۷۷۱ژانتیا விளக்கம் : பேதைமை க்க மங்கைமையாகிய மணப் + தமை கடந்து * መ நற்றிணை தெளிவுரை பருவம் எய்தியதால் (இல்லிகவாப் பருவம்) காடுகாவலாற் கேடுகுழும் என்றஞ்சி இற்சிறைப்படுத்தல் வளமனை மரபு என்று கொள்க. "தெய்வம் பேணி வருந்தல் வேண்டா என்பத ல்ை, அது மறுத்துக், குறிப்பாக அவள் கொண்ட காதல் நோயை கூறியதாகும். களிற்றுத் துப்பு அஞ்சாப் புலியதள்' என்றது. அதனையும் வென்று மேம்பட்ட மறமாண்பினர் அவள் தந்தையும் தமையன்மாரும் என்பதாம்; அது கண்டு திணைகவர வரும் யானைகள் அஞ்சி அகலும் என்பதும் ஆம். பயன் : இதல்ை, தலைவியின் களவுறவை அறிந்த நற்ருய், அதன் விவரங்களை மேலும் ஆராய்ந்து, அவனோடு தலைவியை மணவினைப்படுத்தி மகிழ்வள் என்பதாம். 352. எவ்வாறு வந்தாளோ? பாடியவர் : மதுரைப் பள்ளி மருதங்கிழார் மகனர் சொகுத்தனர். திணை : பாலை. துறை : பொருள்வயிற் பிரிந்த தலைமகன், இடைச்சுரத்துக்கண் ஆற்ருளுய்த் தன்னுள்ளே சொல்லியது. . ((து - வி.) பொருளார்வம் மிகுதலாலே தலைவியைப் பிரிந்து வேற்று நாடு நோக்கிச் செல்கின்ருன் தலைவன். இடை வழியிலே, அவன் நினைவிலே அவள் தோற்றம் தோன்றி மயக்க, அவன் வியந்து வருந்திக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.) இலமாண் பகழிச் சிலைமாண் இரீஇய அன்பில் ஆடவர் அலைத்தலின் பலருடன் வம்பலர் தொலைத்த அஞ்சுவரு கவலை அழல்போல் செவிய சேவல் ஆட்டி கிழலொடு கதிக்கும் கிணம்புரி முதுகரி பச்சூன் கொள்ளை மாந்தி வெய்துற்றுத் தேர்திகழ் வறும்புலம் துழைஇ நீர்கயந்து பதுக்கை கீழல் ஒதுக்கிடம் பெருஅ அருஞ்சுரக் கவலை வருதலின், வருந்திய நமக்கும் அரிய வாயின அமைத்தோள் 10 மாண்புடைக் குறுமகள் நீங்கி, யாங்கு வந்தனள்கொல்? அளியள் தானே! 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/319&oldid=774393" இலிருந்து மீள்விக்கப்பட்டது