பக்கம்:நற்றிணை-2.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை 325 சிவந்த கால்களைக் கொண்டதுமான அன்னப்பறவையானது. பொன்படுதலையுடைய நெடிதான உச்சிகளைக் கொண்ட இமயத்தின் உச்சியிலேயுள்ளவரான, தெய்வ மகளிர்க்கு விருப் போடு விளையாடுவதற்குப் பயன்படும், வளராத தம் இளம் குஞ்சுகளுக்கு இட்டு உண்பிக்கும் இரையைக் கொண்டு செல்லும். அப்ப்டி, நாள்தோறும் செ ல் லும் போது, வருந்துதல் என்பதில்லாத அதன் வலிய சிறகும் வருத்தம் அடைந்தாற்போல, நீயும் அவள்பால் செல்வதும் மீண்டும் வருவதுமாக அலைந்தலைந்து வருத்தம் கொண்டனை! நீ தான் வாழ்வாயாக ஒரு நாள், எம் காதலியானவள் எம் அருகே இருப்பவளாகவும், கீழ்த்திசைத் தோன்றும் வெள்ளியைப் போலத் தோன்றுவதும், எமக்கு என்று வாய்க்குமோ? கருத்து அவளை ஒரு நாள் அடைவோம் என்பதாம். சொற்பொருள் : நிலம் தாழ் மருங்கில் - நிலப்பகுதியானது பள்ளம்பட்டுக் கிடக்கும் பக்கத்தே. தெண்கடல் - தெளிந்த கடல்; குளிர்ந்த கடலும் ஆம். விலங்குதல் - ஒன்றையொன்று ஒட்டாதே பிரிந்து அமைந்திருத்தல். ப்ொன்படு- பொன் படுதலையுடைய, அழகுபடுதலைக் கொண்ட எனினும் ஆம், பொன் - அழகு. இமயத்து உச்சி - இமயத்தின் மேற்பரப்பு: இது வானுரை மகளிர் வாழுமிடம் என்பர். அல்கிரை - இட்டு வைத்துண்ணும் உணவு. அசைவு - வருத்தம். செல்வர - செல்லவும் வரவுமாக. உன்ழை - பக்கம். வெள்ளி - விடிவெள்ளி. இறைச்சி : இமயத்து உச்சியிலுள்ள வாணர மகளிர்க்கு விளையாட்டிற்கு உதவும் அன்னப் பார்ப்புகளுக்கு, அதன் தாய் கடலிடத்தேயுள்ள இரையை மிக வருத்தத்துடன் கொண்டு செல்லும் என்றனர்; அவ்வாறே தலைமகனும் தமர் பேச்சுக்கும் காப்புக்கும் உட்பட்ட தன் காதலியை வரைந்து கொள்ளற் கான பணத்தைத் தேடிவரும் பொருட்டுச் சென்று சென்று வருந்தினன் என்பதாம். - . . . - விளக்கம் : இதல்ை, அவன் தந்த வரைபொருள் போதா வென்று தலைவியின்தமர் அவளைத் தர மறுத்தனர் என்பதாம். அன்போடு சிரமப்பட்டுத் உணவு தேடித்தரும் தாயைவிட்டு, வாணர மகளிர்க்கு விளையாட்டுத் துணையாகி விளங்கும் அன்னப் பார்ப்புகள் போலத், தலைவியும் தலைவனின் துன்பம் நோக்காதே, தமர்பால் கட்டுண்டு அமைந்தனள் என்பதுமாம். ஆகவே, தலைமகன் மீளவும் சென்று பெரும் பொருள் தேடி வந்து தந்து, அவளைப் பெறுவதற்கு உறுதிபூண்டான். எனவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/329&oldid=774419" இலிருந்து மீள்விக்கப்பட்டது