பக்கம்:நற்றிணை-2.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- جޛު " هم لمم இதன் 328 .ே { - நற்றின தெளிவுரை \ 358. பரவினம் வருகம்! பாடியவர் : நக்கீரர். திணை : நெய்தல். துறை : 1. பட்ட பின்றை வரையாது பொருள்வயிற் பிரிந்த காலத்துத்.தோழி, 'இவள் ஆற்ருளாயினுள்; இவளை இழந்தேன்’ எனக் கவன்ருள் வற்புறுத்தது; 2 அக்காலத்து ஆற்ருளாய் நின்ற தலைமகள் தோழிக்குச் சொல்லியது உமாம். ((து - வி.) பிரிந்து சென்ற காதலனின் வரவு நீட்டிக்கத் தலைவியின் துயரம் மிகுவதைக்கண்ட தோழி பெரிதும் வருந்து கின்ருள். தலைவி இறந்துபடுவாளோ என்றும் நினைக்கின்ருள். அதனால், கடல் தெய்வத்துக்கு வழிபாடு செய்வோம் என்று கூறுகின்ருள்; அவள் கூறுவதாக அமைந்த செய்யுள் இது. 2. அப்படி அவள் வருந்திய காலத்திலே தலைவி, தோழிக்குச் குச் சொன்னதாகவும் கொள்ளலாம்.) . பெருந்தோள் நெகிழ அவ்வரி வாடச் சிறுமெல் ஆகம் பெரும்பசப்பு ஊர இன்னேம் ஆக எற்கண்டு நாணி கின்னெடு தெளித்தனர் ஆயினும், என்னது உம் அணங்கல் ஒம்புமதி வாழிய நீயெனக் .5 கணங்கெழு கடவுட்கு உயர்பலி தூஉய்ப் பரவினம் வருகம் சென்மோ தோழி! பெருஞ்சேய் இறவின் துய்த்தலை முடங்கல் சிறுவெண் காக்கை நாளிரை பெறுஉம் பசும்பூண் வழுதி மருங்கை அன்னவென் 10 அரும்பெறல் ஆய்கவின் தொலையப் பிரிந்தாண்டு உறைதல் வல்லி யோரே! தெளிவுரை : பெரிதான சிவந்த பஞ்சுபோன்ற தலையை யுடைய இறவின் முடங்கலைச், சிறிய வெண்காக்கையானது தனக்குரிய நாட்காலேயின் இரையாகப் பெறுகின்ற வளமை யுடையது, பசும்பூண் பாண்டிபனுக்கு உரியதான மருங்கூர்ப் பட்டினம். அதைப் போன்ற, என் அரிதாகப் பெறலான நுட்ப மான அழகெல்லாம் தொலைந்துபோக, என்னைப் பிரிந்து, தாம் சென்றுள்ள அவ்விடத்தேயே தங்கியிருத்தற்கு வல்லமை கொண்டவர் நம் தலைவராகிய அவர். தோழி! அதனுலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/332&oldid=774424" இலிருந்து மீள்விக்கப்பட்டது