பக்கம்:நற்றிணை-2.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{ - ۱ ما را - "θηάρνίνο $33 6 ஆம் \ - நற்றிணை தெளிவுரை f அவ்வாறே தலைவி வேற்றுமலைத் தழையுடை அணிந்து வரக் காணின் தாயும் பிறரும் மயங்குவர் என்றதாம். அன்றித் தலைவியின் குறிப்பிலே நாணங் கவிந்து இசைவு தோன்ருது போகக் கண்ட தோழி, அவள் மறுத்தாளென மயங்கினள் என்றும் கொள்ளலாம். தழையை வாடவிடின் தாயறியாது மயங்கும் நாடதை லினலே, அவன்முன், நாம் அவனிட்த்து அன்பற்ருேம் என்று கருதி மயங்கி, நம்மை அகன்றுபோதலும் கூடும் என்பதுமாம், பயன் : "தழையுடையைத் தலைவி ஏ ற் று க் கொள்ளக் காதலர் இருவரும் மகிழ்ந்து இன்பிலே திளைப்பர் என்பதாம். பாடபேதம் : கேடு நீயும் அஞ்சுதியே. 360. சிறக்க கின் பரத்தை! பாடியவர் : ஒரம் போகியார். திணை : மருதம். துறை : (1) பரத்தையிற் பிரிந்த தலைமகனைத் தோழி, தலைமகள் குறிப் பறிந்து வாயில் மறுத்தது: (2) தலைமகள் ஊடிச் சொல்லியதும் ஆம். - ((து-வி.) (1) தலைமகன், தன்னைப் பிரிந்து கைவிட்டுப் பரத்தையின் உறவிலே களித்துக் கிடந்தான் என்பதல்ை தலைவிக்கு அவன்மேல் வருத்தமும் சினமும் ஏற்பட்டன. இவ் வேளையில் ஒருநாள் அவன் மீண்டும் தலைவியின் உறவை நாடித் தன்வீட்டிற்கு வருகின்றன். அப்போது தலைவிமுகங்கொடுத்துப் பேசாது ஒதுங்கி விடுகின்ருள். அவள் குறிப்பறிந்த தோழி தலைவனிடம் கூறுவதாக அமைந்த செய்யுள் இது. (2) தலை வியே தன் ஊடற்சினம் வெளிப்படச் சொல்லியதாகவும் கொள்ளலாம்.) முழவுமுகம் புலர்ந்து முறையின் ஆடிய விழவொழி களத்த பாவை போல - நெருகைப் புணர்ந்தோர் புதுநலம் வெளவி இன்றுதரு மகளிர் மென்தோள் பெlஇயர் சென்றி-பெரும!-சிறக்க கின் பரத்தை! பல்லோர் பழித்தல் :ாணி, வல்லே காழின் குத்திக் கசிந்தவர் அல்லப்பக் கையிடை வை த்தது மெய்யிடைத் திமிரும் 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/336&oldid=774432" இலிருந்து மீள்விக்கப்பட்டது