பக்கம்:நற்றிணை-2.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை 341 கருத்து : 'இனிச் சாவுதான் எனக்கு அமைதி தரும் என்பதாம். சொற்பொருள் : எல்லையும் . பகலும் மங்குல் - காரிருள். முனிவு - சினம். இறுப்ப - வந்து தங்க ஊழின் - முறையாக. உரும் . இடி. ஈர்மணி - குளிர்ந்த ஒலிசெய்யும் மணி. இயம்ப எழுந்து ஒலிக்க. கல்லா - கல்லாத்; வேறு ஒரு தொழிலையும் கற்றிலாத மன்று - ஊர்மன்று; வந்த மாடுகளை ஒருங்கு சேர்த்துச் சரிபார்க்கும் மந்தைவெளி. துணைதரும் - விரையும். செயிர் - குற்றம். w விளக்கம் : கிடங்கில் என்பது இந்நாளையத் திண்டிவ்னம் பக்கத்திருந்த ஒர் ஊர் என்பர் ஒளவை. உருமிசை அறியாச் சிறு செந்நாவின் ஈர்மணி என்றது, அது தான் இனிதாக ஒலிப் பத்ன்றி, எக்காலத்து உருமின்சபோலக் (இடியொலி ப்ோல) கடிதாக ஒலித்தல் இல்லை என்பதற்காம். "செயிர்தீர் மாரி' என்றது, அது தன் காலத்தே பொய்க்காதாய் வந்து பெய்த லால். சொன்ன காலம் கழிந்தது; மாலையும் வாடையும் வந்து என்னை வருத்திக் கொல்லும் என்ருல் அவற்றுக்குத் தப்பி இனியும் பல நாட்கள் உயிர்வாழ இயலாது என்பது தலைவியின் துயரக் குரலாகும். 'பல்லான்' என்பது பசுவினப் பெருக்கையும், " மன்றுதோறிசைப்ப' என்றது, அவை கூடும் மன்றுகளின் பெருக்கத்தையும் காட்டுவதாம். கல்லாக் கோவலர்' என்பது, பிரிந்தாரைத் தம் குழலொலி வருத்தும் என்பதைக் கல்லாத வரான கோவலர் எனினும் ஆம்; ஆகவே, அவர் மிக்க இளம் பருவத்தாராதலும் பொருந்தும். பயன் : இதன் பயனகத் தலைவியின் வேதனை மிகுதி கண்டு, அவர் விரைய வருவார்; சொற்பிழையார் எனத் தோழி ஆற்றுவிப்பாள்; அது கேட்டுத் தலைவியும் சிறிதுஅமைதி அடைவாள் என்பதாம். பாடபேதங்கள் : நீர் பொழிந்து இயங்க; முனிவு மெய்ந் நிறுப்ப; ஊர்வயின் இயம்ப மன்றுதோறு இசைப்ப். 365. அவனுர், வினவிப் போவோமா! பாடியவர் : |ಿತ கிழார் மகனர் ੇਜ਼ੁ) திணை : குறிஞ்சி --தோழி,-தலைமகன்-சிறைப்புற்த் தாகை, தலைமகட்கு உரைப்பாளாய் இயற்பழித்து, இன்னது செய்தும் என்பாளாய்ச் சொல்லியது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/345&oldid=774452" இலிருந்து மீள்விக்கப்பட்டது