பக்கம்:நற்றிணை-2.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342 நற்றிணை தெளிவுரை ((து - வி.) தலைவன் வந்து செவ்விநோக்கி ஒருபக்கமாக மறைந்து நிற்பனைத் தோழி காண்கின்ருள். அவன் உள்ளத்தை விரைந்து தலைவியை மணந்து கொள்வதிலே செலுத்த நினைக் கிருள். தலைவியிடம் நெருங்கிச் சென்று, அவனை இக்ழ்ந்து பேசு கின்ருள். இதனைக் கேட்கும் தலைவன், தன் அறியாமையை உணர்ந்து தெளிவான் என்பது இதன் பயனகும். அந்தத் தோழியின் பேச்சாக அமைந்த செய்யுள் இது.) அருங்கடி அன்ன காவல் விேப் பெருங்கடை இறந்து மன்றம் போகிப் பகலே பலரும் காண வாய்விட்டு அகல்வயற்படப்பை அவனுர் வினவிச் சென்மோ வாழி-தோழி!-பல்நாள் கருவி வானம் பெய்யா தாயினும் அருவியார்க்கும் அயந்திகழ் சிலம்பின் வான்தோய் மாமலைக் கிழவனைச் "சான்ருேய் அல்லை' என்றனம் வரற்கே. 5 தெளிவுரை : தோழி! வாழ்வாயாக! பலப்பல நாட்களும் தொகுதியையுடைய மேகம் பெய்யாது போனலும், அருவியின் ஒலியானது கேட்டபடியேயிருக்கும், நீர்வளத்தையுடைய பக்க மலைகளைக் கொண்டதும், வானத்தே தோய்ந்தாற்போல உயர்ந்ததுமான பெரிய மலைநாடன், நம் தலைவன். அவனை, நீ தான் சால்புடையவன் அல்லை என்று சொன்னேமாக, மீண்டும் நம்மூர்க்கு வருவதற்கு- - . அருமையான காவலைச் செய்துள்ள அன்னையின் காவல் ஏற்பாடுகளையும் கடந்தேமாய், பெரிய கடைவாயிலையும் நீங்கினமாய், ஊர்ப்பொதுவாகிய மன்றத்திடத்தே சென்று, பகற்போதிலேயே, பலரும் நம் செயலைக் காணும்படியாக, வாய்விட்டு, அகன்ற வயல் சூழ்ந்த கொல்லைகளையுடைய அவன் ஊரினைக் கேட்டறிந்தேமாய், நாமும் செல்வோமோ? நீதான் கூறுவாயாக என்பதாம். •. . - கருத்து : 'அவன் நம்பால் அருளுடையவனாகத் தோன்ருத தேைல, அவனுர்க்கு நாமே நம் நாண்விட்டுச் சென்று, அவனிடம் இதுதான் நின் சால்போ? எனக் கேட்டு வருவோமா? என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/346&oldid=774454" இலிருந்து மீள்விக்கப்பட்டது