பக்கம்:நற்றிணை-2.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை 343 சொற்பொருள் : கடி. காவல் நீவி - கடந்து. இறந்து - நீங்கிச் சென்று. மன்றம் - ஊர்மன்றம். படப்பை - கொல்லை. கருவி - தொகுதி. அய்ம் - நீர்வளம். சான்ருேய் - சால் பு £2_65)LLIQl6T, இறைச்சி : சால்பில்லாதவனது மலையாயிருந்தும் பல நாளும் மழையற்றபோதும், அருவிநீர் வீழ்கின்ற ஒலியுடைய தாயிருக்கின்றதுதான் எதேைலா? என்று கூறி வியப்பது போலப் பழித்ததாகும். - விளக்கம் : மன்றம் போகிப் பகலே பலரும் காண வாய். விட்டு அவனுர் வினவிச் சென்மோ? என்றது, பெண்மைக்கு ஏலாத செய்லேயானலும், அதனை நாண்விட்டாயினும் நாம் செய்தால் அல்லாமல், அவன்முன், தானே நமக்கு அருளிச் செய்து காக்கும் சால்புடையவன் அல்லையே! என்று கூறி நொந்து பழிப்பதாகும் இது. இந்த நிலைக்கு அவரை அவன் செல்லவிடான் ஆதலின், விரைவிலே மணவினைக்கு ஆவன செய்வான் என்பதும் விளங்கும். அவனுர்வினவி' என்றத்ல்ை வினவுதல் தம்மூரின் மன்றிடத்தே எதிர்ப்படும் பலரையும் என்க. இதல்ை, விளைவது பழியென்பதும் குறிப்பாக உணர்த் தினளாம். இதல்ை. அவன் களவே விரும்பியவகை ஒழுகும் மனப்போக்கினன் என்பதும் அறியப்படும். ஊர்மன்றிற் சென்று அவனுர் வினவிச் செல்வோம் என்றது, ஊர்மன்றமே வழியோடு செல்வாரான பாணர் முதலியோர் பலரும் தங்கிப் போகும் இடமாதலால். "ஒரு சிறை நெஞ்சமோடு உசாவுங்காலை, உரியதாகலும் உண்டென மொழி (தொல். பொருள். 203) என்னும் விதியால் இவ்வாறு மரபல்லாதன செய்வோமோ என்று நினைத்தலும் கூறுதலும் இயல்பாகும் என்று கொள்க. ஆயின் செய்வது என்பது இல்லை என்பதும் உறுதியாம். - பயன் . இதன கேட்கும் தலைவன் வெட்கித் தன் பிழை யுணர்ந்தவய்ை விரைவில் மணவினைக்கு ஏற்பாடு செய்வான் என்பதும், தலைவி, அவன்பாற் கொண்ட அன்பின் உறுதிப் பாட்டைத் தோழிக்கு உணர்த்துவாள் என்பதுமாம். 366. பிரிவோர் மடவர் பாடியவர் : மதுரை ஈழத்துப் பூதன் தேவனர். திணை. பாலை, துறை : உலகியல் கூறிப் பொருள்வயிற் பிரிய வலித்த நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/347&oldid=774456" இலிருந்து மீள்விக்கப்பட்டது