பக்கம்:நற்றிணை-2.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 நற்றிணை தெளிவுரை உள்ளுறை : காக்கையின் பெடையானது தன் குஞ்சைத் தழுவிக்கொண்டு சோற்றுப்பலியைக் கவரக் கூடியிருக்கும் மனை என்று குறித்தனர்; இவ்வாறே தலைவியும் தன் மகனைத் தழுவிக் கொண்டு சுற்றம் பேணி நல்விருந்தாற்றி இல்லறத்தைப் புகழுடன் நடத்துபவாளாவள் என்பதாம். 'பாளைதந்த பஞ்சியங் குறுங்காய், ஓங்கிரும் பெண்ணை நுங்கோடு பெயரும் ஆதியருமன் மூதூர்' என்று குறுந்தொகை யுள் கள்ளில் ஆத்திரையனர் (193) கூறுவர். ஆகவே, ஆதி அருமனின் ஊர் மூதூர் என்றே வழங்கியது எனலாம். சிறுகுடிசிறிய குடியிருப்பென்று கொள்ளலாம். 368. வெய்ய உயிர்த்தனள்! பாடியவர்: கபிலர். திணை : குறிஞ்சி. துறை : தோழி தலைமகற்குச் செறிப்பு அறிவுறீஇயது. - ((து - வி.) தலைமகன் தலைமகளை வரைந்து வருவதற்கு முயலாதவளுகத் தொடர்ந்து களவுறவிலேயே.ஈடுபட்டு வருத லால், தோழிக்குக் கவலை மிகுதியாகின்றது. அவள், தலைவி இற்செறிக்கப்படுவாள் என்பதை அவனுக்கு அறிவுறுத்துவதன் மூலம், அவளுல் இனியும் களவுறவிலே இன்பங்க்ாண்பது இயலாதென்பதைச் சுட்டிக்காட்டி, அவன் உள்ளத்தை மணவினையின்பாற் செலுத்த முயல்கின்ருள். அவள் சொல் வதாக அமைந்த செய்யுள் இது.) பெரும்புனம் கவரும் சிறுகிளி ஒப்பிக் கருங்கால் வேங்கை ஊசல் தூங்கிக் கோடேந்து அல்குல் தழையணிந்து, உம்மொடு ஆடினம் வருதலின் இனியதும் உண்டோ, நெறிபறி கூழைக் கார்முதிர்பு இருந்த 5 வெறிகமழ் கொண்ட நாற்றமுஞ் சிறிய பசலை பாய்தரு நுதலும் நோக்கி வறிதுகு நெஞ்சினள் பிறிதொன்று சுட்டி வெய்ய உயிர்த்தனள் யாயேஐய! அஞ்சினம், அளியம் யாமே! 10 தெளிவுரை : ஐயனே! பெரிய திணைப்புனத்திலே புகுந்து கதிர்களைக் கவரும் சிறுகிளிகளை ஒப்பியும், கருமையான .ே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/352&oldid=774468" இலிருந்து மீள்விக்கப்பட்டது