பக்கம்:நற்றிணை-2.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 நற்றிணை தெளிவுரை - [( து. வி.) (1) மனைவியைப் பிரிந்து மறந்து பரத்தை இன்பத்திலே மயங்கிக் கிடந்தவன், மீண்டும் தன் மனைவியை நாடி வருகின்ருன். அவளோ ஊடலாற் சினந்து ஒதுங்கி விடுகின்ருள். அவன் பன்முறை வேண்டியும் அவள் இசைய வில்லை. அப்போது, அவனிடம் ஆற்ருமை மிகுகின்றது. அவளும் கேட்டறியுமாறு, தம் முன்னைக் காலத்து நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்தவகைத் தன் பாணனிடம் கூறுகின்றதாக அமைந்த செய்யுள் இது. (2) தலைவியை மறந்தனையே, அவள் சினந்து வெறுத்து ஒதுக்கினல் யாதாகுமோ எனக் கவலையோடு சொன்ன பாணனுக்கு, அவளது உழுவலன்பு புலப்படத் தலைவன் கூறியதாக அமைந்ததாகவும் கொள்ளலாம்.) வாராய் பாண நகுகம்-நேரிழை கடும்புடைக் கடுஞ்சூல் நங்குடிக்கு உதவி கெய்யொடு இமைக்கும் ஐயவித் திரள்காழ் விளங்குநகர் விளங்கக் கிடந்தோள் குறுகிப் புதல்வன் ஈன்றெனப் பெயர்பெயர்த் தவ்வரித் 5 திதலை அல்குல் முதுபெண் டாகித் துஞ்சுதியோமெல் அஞ்சில் ஒதியெனப் பன்மாண் அகட்டிற் குவளை ஒற்றி உள்ளினென் உறையும் எற்கண்டு மெல்ல - முகைகாள் முறுவல் தோற்றித் 10 தகைமலர் உண்கண் கைபுதைத் ததுவே! தெளிவுரை : பாணனே! இங்கே வருவாயாக. நேரான அணிகலன்களை அணிந்தவள் நம் தலைவி. அவள் சுற்றத்தாரால் பேணப்படும் தலைச்சூலினைக் கொண்டாளாக, நம் குடிக்குப் புதல்வனையும் தந்து உதவிள்ை. நெய்யுடனே கலந்து ஒளி வீசு கின்ற சிறு வெண்கடுகாகிய திரண்ட விதைகளை மாளிகையுள் அவளிருந்த இடம் எங்கும் பேய்க்காப்பாக விளங்கும்படித் தூவிவைத்திருந்தனர். அதற்கிடையே படுத்திருந்தவளை, நெருங்கி, புதல்வனைப் பெற்றதனலே தாய் என்னும் வேருெரு பெயரினையும் பெற்றனையாய், அழகிய வரிகளும் தித்தியும் உண்டய அல்குலைப்பெற்ற முதுபெண்டாகித் தூங்குகின்ருயோ, மென்மையோடு அழகிய சிலவாக முடிக்கப்பெறும் கூந்தலை யுடையாளே! என்று சொல்லி, பலவான மாட்சியுடைய அவள் வயிற்றிடத்தே என் கையிடத்துள்ள குவளை மலரால் ஒற்றிய படியே சிலபொழுது சுருதினேன். அங்ங்ணம் சிந்தனை வயப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/356&oldid=774476" இலிருந்து மீள்விக்கப்பட்டது