பக்கம்:நற்றிணை-2.pdf/364

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

sso நற்றிணை தெளிவுை மணவினை முடித்தலைக் கருதி இற்செறிப்பர் எனவும் கொள்ள லாம். இப்போதும் கணிவாய் வேங்கை' என்பது பொருந்தும். உள்ளுறை : மந்தியானது முற்றத்துப் பலாவின் பழத்தைப் பிளந்து பழச்சுளைகளைத் தின்றுவிட்டுக் கொட்டைகளைக் கீழே போடும். அதனைப் பாராட்டாது குறமகள் மலைவளம் பாடி நெற்குற்றுவாள். அத்தகைய மலைநாடன் என்றனர். இது தலைவியைக் களவிலே கூடி நலனுண்டுவிட்டுச் செல்லும் தலைவன், ஊரிலே பழிச்சொல்லை உதிர்த்துச் செல்வான்; அதனையறியாதே அன்னையும் தெய்வம் அணங்கிற்றுப் போலும் என நினைந்து, இற்செறித்து, வெறியாடலுக்கு ஏற்பாடு செய்வாள் என்றதாம். பயன் : தலைவன், தலைவியை, விரைவிலே மணந்து கொண்டு, பிரியா இன்பவாழ்விலே இல்லறமாற்றுதலை நிகழ்த் தற்கு முற்படுவான் என்பதாம். 374, முற்றையும் உடையமோ? பாடியவர் : வன்பரணர். திணை : 'முல்லை. துறை : வினை முற்றி மீள்வான், இடைச்சுரத்துக் கண்டார்க்குச் சொல்லியது. ((து - வி.) சென்ற வினையினைச் செவ்வையாக முடித்த பின், தன் ஊர்நோக்கித் திரும்பி வந்துகொண்டிருக்கின்ருன். இடைவழியிலே, வினைமேற் செல்லும் புதியவர் சிலரைக் காணு கின்ருன். அவர்கள் அவனைப்பற்றிய சிறப்புக்களை வினவ, அவன் அவர்கட்குத் தன்னுடைய நிலையைச் சொல்லுவதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.) முரம்புதலே மணந்த நிரம்பா இயவின் ஓங்கித் தோன்றும் உமண்பொலி சிறுகுடிக் களரிப் புளியிற் காய்பசி பெயர்ப்ப உச்சிக் கொண்ட ஓங்குகுடை வம்பலீர்! முற்றையும் உடையமோ மற்றே-பிற்றை 5 வீழ்மா மணிய புனைநெடுங் கூந்தல் ர்ேவார் புள்ளி ஆகம் நனப்ப, விருந்தயர் விருப்பினள் வருந்தும் திருந்திழை அரிவைத் தேமொழி நிலையே? 萄

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/364&oldid=774494" இலிருந்து மீள்விக்கப்பட்டது