பக்கம்:நற்றிணை-2.pdf/366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362 நற்றிணை தெளிவுரை விளக்கம் : வினைமேற் செல்வார் எத்தகு துயரையும் ஏற்றுத் தம் கருமமே கண்ணுக மேற்செல்வர் என்பதற்கு வழிச் செல்வாரின் பசி வருத்தமும், அதனைப் பாராட்டாதே அவர் முயன்று வழிநடத்தலும் கூறினர். அவரும் தத்தம் குடும்பங் களைப் பிரிந்தே வருபவராதலின், அவர்க்குத் தான் வினை முடித்துத் திரும்பினும், தன் மனைவி பட்டிருக்கும் வேதனைகளை நினைந்து வருந்தும் நிலையைக் கூறுகின்ருன் என்று கொள்க. இப்படிச் சொல்வது இவன் வெற்றிப் பெருமிதத்தால் எனவும் அறிதல்வேண்டும். பயன் : இதல்ை, வழிச்செல்வாருள்ளும் ஒரிருவர் தம் காதன் மனைவியரைப் பிரிந்தவர், மனம் மாறி ஊர் திரும்பு தலும் கூடும் என்பதாம். 375. கன்னுதல் உவப்ப வருக! பாடியவர் : பொதும்பில் கிழார் மகன் வெண்கண்ணி. திணை : நெய்தல். துறை : வன்ரயாது நெடுங் காலம் வந்தொழுக, தலைமகளது நிலையுணர்ந்து தோழி, வரைவு கடTயது. ((து-வி.) மணம் செய்துகொள்வது பற்றிய நினைவே இல்லாமல், நெடுங்காலம் களவுறவிலேயே தலைவியோடு இன்பம் நுக்ர்ந்துவரும் தலைவனின் போக்கு தலைமகளுக்கு மிகுந்த வருத்தம் தருகிறது என்ருலும், அவளால் வெளிப்படச் சொல்லவும் இயலவில்லை. இந்நிலையில் தோழி, தலைமகனிடம் தம்முடைய நிலையைக் குறிப்பாக உரைத்து வரைவு வேட்டுக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.) - டுேசினப் புன்னை நறுந்தாது உதிரக் கோடுபுனை குருகின் தோடுதலைப்பெயரும் பல்பூங் கானல் மல்குநீர்ச் சேர்ப்ப அன்பில; ஆதலின் தன்புலன் நயந்த என்னும் நானும் கன்னுதல் உவப்ப 5 வருவை ஆயினே கன்றே-பெருங்கடல் - இரவுத்தல மண்டிலம் பெயர்ந்தென, உரவுத்திரை எறிவன போல வருஉம் உயர்மணல் படப்பைளம் உறைவின் ஊரே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/366&oldid=774501" இலிருந்து மீள்விக்கப்பட்டது