பக்கம்:நற்றிணை-2.pdf/370

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366 நற்றிணை தெளிவுரை கொள்ளும்படியாகச் சொல்வீராக என்றதாம். பிற்றை அணங்கும் அணங்கும் போலும் என்பது தல்ைவியின் எழிலிலே தோன்றும் புதிய மாறுதல்கள் அவனை நினைந்து ஏங்கும் ஏக்கத் தின் விளைவாயிருக்கி, இனி வேறு ஓர் அணங்கும் தாக்கி வருத்துமோ என்பதாம். வரையோன்' என்பது வரையான் என்பதன் திரிபு. - பயன் . இதனைக் கேட்டலுறும் தலைவன், இனிக் களவு உறவு வாயாதென்பதும், தன்னையன்றி அவள் வாழாள் என்பதும் உணர்ந்தாளுய், விரைவிலே மணந்துகொள்ளும் முயற்சிகளிலே ஈடுபடுவானவான் என்பதாம். 377. கழறுபு மெலிக்கும் நோய் பாடியவர் : மடல் பாடிய மாதங்கீரனர். திணை குறிஞ்சி. துறை : சேட்படுக்கப்பட்டு, ஆற்ருளுகிய் தலைமகன், தோழி கேட்பத் தன்னுள்ளே சொல்லியது. ((து-வி.) தலைவன் பாங்கியின் உதவியோடு தலைவியை அடைய முற்படுகின்றன். அவளோ, அவன் வரைந்து கொள்வ தன்றிக் கள்வுறவிலேயே தொடர்ந்த நாட்டம் உடையவகை இருப்பதறிந்து, அவனுக்கு உதவ மறுக்கின்ருள். அதனைப் பொருத தலைவன், தன் நெஞ்சோடு சொல்வான் போல, அவளும் கேட்டுத் தனக்கு இரக்கம் காட்டும் வகையில் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.) மடல்மா ஊர்ந்து மாலைசூடிக் கண்ணகன் வைப்பின் நாடும் ஊரும் ஒண்ணுதல் அரிவை நலம்பா ராட்டிப் பண்ணல் மேவலம் ஆகி அரிதுற்று அதுபிணி யாக விளியலங் கொல்லோ- 5 அகலிறு விசும்பின் அரவுக்குறை படுத்த பசுங்கதிர் மதியத்து அகனிலாப் போல அளகஞ் சேர்ந்த சிறுநுதல் கழறுபு மெலிக்கும் நோயா கின்றே: தெளிவுரை : அன்ற கரிய வானத்திடத்தே, அரவினலே விழுங்கப்பட்டுக் குறைப்படுத்தப்பட்ட பசுமையான் கதிர்கள் விரிதலையுடைய திங்களின் விரிந்த நிலாவைப் போல ஒளி வீசுகின்ற, கூந்தலோடு சேர்ந்த சிறு நுதலையுடையவள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/370&oldid=774511" இலிருந்து மீள்விக்கப்பட்டது