பக்கம்:நற்றிணை-2.pdf/373

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை . . . 869 தெளிவுரை : தோழி! யாமமும் நெடும்பொழுதாக வளர்ந்தபடியே மெல்லக் கழியா நிற்கும்; காமநோயும் கண்களை மூடவிடாதாய்ப் பெருகாநிற்கும்; தெளிந்த கடலிலே முழங்கும் அலைகளும், முழவோசைபோல, மெல்லமெல்லப் பழம்புண் பட்டவர்களைப் போலக் கடலிடத்தே புரண்டு இயங்கி அசைந்தபடி யிருக்கும். அவை அவ்வண்ணமாக நம்மை நலிவிக்கவும், எவ்விடத்தும் இரவைக் கடந்து நீங்கியதாகக் கதிரவனும் தோன்றினபாடில்லை. உயர்ந்த மணற்பரப்பிடத்தே, வரிகள் அமைந்த நம் சிறு வீட்டைக் கலைத்தவகை வந்து, அதற்கு வருந்தின்ை போல நமக்கு அவன்மேற் பரிவுண்டாகுமாறு அவன் சொல்லிய பணிவான பேச்சுக்களை நம்பிளுேம். பக்கத்திலே ஒலிக்கும் குளிர்ந்த நீர்ப்பெருக்கையுடைய சேர்ப்பனேடு, ஆராய்ந்து பாராதே உடன்பட்டதல்ை ஆகிய நட்பினது அளவுதான் என்ன? அலர் கூறும் வாயையுடையவரான அயல்வீட்டுப் பெண்கள் எம் நெற்றியிலே தோன்றியுள்ள பசலைநோயைக் குறிப்பிட்டுப் பாடும் இழிவுதான் நமக்கு ஏற்பட்டது. கருத்து : 'அவன் உறவால் பெற்றது பழியே' என்பதாம். சொற்பொருள் : யாமம் - இரவின் நடுயாமம்; நெடிய கழியும் என்றது, தன் ஆற்ருமையால் தோன்றுவது. படல் - மூடல். ஈயாது - விடாது. பழம்புண் - நெடுநாள் ஆருத புண். ஆலும் - அசையும், கடல் அலை புரண்டு புரண்டு ஓயாது இயங்குவதற்குப் பழம்புண்பட்டவர் நோவால் இடை பருது புரண்டு புரண்டு படும் வேதனைமுண்கலைக் குறித்தனள். இரவு இறந்து - இரவைக் கடந்து. எல்லை - பகல். அயலிற் பெண்டிர் - பக்கத்துவிட்டுப் பெண்கள். பசலை பாட - பசலை பற்றியே வாய் ஒயாது பாடிக்கொண்டிருக்க. வரியார் சிறுமனை - வரிகள் பொருந்திய சிற்றில். சிதைஇ - சிதைத்து. பணிமொழி - பணிந்து கூறிய சொற் கள். தொட்ட - சொல்லிய நாடாது - ஆராயாது. விளக்கம் : நாடாது நட்டலும் ஊழால் விழைவது என்பது நாடாது இயைந்த நண்பினது. என்பதால் விளங்கும். நாடாது நட்டலிற் கேடில்லை' எனவரும் குறளும் இந்தக் கருத்தை எதிரொலிக்கும். மணற்சிற்றில் சிதைத்து, அதன் காரணமாக யாம் வருந்தி நலிந்தேமாக, எம்மைத் தேற்று மாறு அவன் கூறிய பணிமொழிகளாலே பரிவுற்று, யாம் அவனுடன் கொண்ட நட்பு என்றது. அன்றும் அவ்வாறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/373&oldid=774517" இலிருந்து மீள்விக்கப்பட்டது