பக்கம்:நற்றிணை-2.pdf/382

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378 நற்றிணை தெளிவுரை பொருள் தேடியதும் தன்னை நாடி வராததை நினைந்து வருந்தியதாம். நண்ணுர் தூற்றும் பழியாவது, அவன் மீண்டு வருங்காலத்தே, தலைவி தான் துயரத்தால் உயிரிழந்து போகக் கண்ட அயற்பெண்டிர், அவள் சாவுக்கு அவனே காரணன் என்று பழிப்பதை உளங்கொண்டு சொன்னதாம். இதன் அமைப்பு, இவள் காதலன் கடல் கடந்து வினைமேற் கொண்டு வேற்றுநாடு சென்று, குறித்த நாளிலே மீண்டு வராதே காலம் தாழ்த்தவன் என்பதையும் காட்டும். பயன்: தோழி, தலைவி ஆற்றியிருப்பாள் என்று தெளிந்து தன் மனத்துயரம் தீர்வாள் என்பதாம். - 383. அருளாய் அன்றே! பாடியவர்: கோளியூர்கிழார் மகளுர் செழியர்ை. திணை : குறிஞ்சி. துறை : தோழி, ஆறு பார்த்துற்றுச் சொல்லியது. ((து . வி.) களவிலே வந்து உறவாடிச் சொல்லும் தலை வனின் உள்ளத்தை வரைந்துவந்து ன்ேே செலுத்த நினைக்கின்ருள் தோழி. அதனலே, அவன் வரும் வழியிலுள்ள துன்பங்களை நினைந்து தாம் அஞ்சுவதாகக் கூறி, அவனுக்குத் தன் கருத்தை நுட்பமாகப் புரியவைக் கின்ருள். இவ்வாறு அமைந்த செய்யுள் இது.) கல்லயற் கலித்த கடுங்கால் வேங்கை அலங்கலம் தொடலை அன்ன குருளை வயப்புனிற் றிரும்பிணப் பசித்தென, வயப்புலி புகர்முகம் சிதையத் தாக்கிக் களிறட்டு உருமிசை உரறும் உட்த்வரு நடுநாள் - 5 அருளின போலினும் அருளாய் அன்றேகனயிருள் புதைத்த அஞ்சுவரும் இயவில் பாம்புடன்று இரிக்கும் உருமொடு ஓங்குவரை நாட! நீ வருதலானே! தெளிவுரை உயர்ந்த மலைநாட்டைச் சேர்ந்தோனே! நீதான் தலைமகளுக்கு அருளுடையவன் போலவே நடந்து கொண்டாயானலும், உண்மையிலே அருளற்றவனே ஆவாய் காண்! மலையின் தாழ்ந்த பக்கத்திலே, தழைத்துள்ள கரிய அடியையுடைய வேங்கைமரத்தினது பூக்களால்ே தொடுக்கப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/382&oldid=774535" இலிருந்து மீள்விக்கப்பட்டது