பக்கம்:நற்றிணை-2.pdf/394

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390 நற்றிணை தெளிவுரை விளக்கம் : சிறிய நெஞ்சம்' என்றது, அவன் உயர்வைச் சிறப்பிக்க நினைந்து கூறியதாம். தேங்கமழ் தேறல் கிளையோடு மாந்திப் பெரிய மகிழும் துறைவன்' என்றது, தலைவனையே குறித்ததாகவும் கொள்ளலாம். அப்படித் தன் இனத்தோடு கூடிப் பெரிதாகக் களித்திருக்கும் அவன், "என் சிறிய நெஞ்சத்தும் அகலாதே உள்ளனன்' என்கிருள் தலைவி. அவள் மீது வருத்தம் இருந்தாலும், அதையும் தன் செவ்வியால் மறைத்தொழுகும் பெண்மைப் பண்பு இது. அவள் இரவெல்லாம் உறங்காது புலம்பியிருந்தமையும். வைகறையில் அவன் களிப்புக் குரல்கேட்டு மேலும் நொந்தமையும் இச் செய்யுள் காட்டும். - பயன் : இதனை மறைந்திருந்து கேட்பவன், தன்னுடைய நிலைக்கு வருந்தி விரைந்து மணவினைக்காவன பலவும் முயல்வான் என்பதாம். 389. காமம் அமைந்த தொடர்பு பாடியவர்: காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனர். திணை: குறிஞ்சி. துறை : பதற்குறி வந்து ஒழுகா நின்ற காலத்துத் தலைமகன் கேட்பச் சொல்லியது. - ((து . வி.) பகற்போதிலே வந்து தலைவியோடு களவிலே உறவிாடி மகிழ்ந்து வருகின்ற தலைவன், தலைவியை வரைந்து வந்து மணந்துகொள்வது பற்றிய சிந்தனையே இல்லாதவகை இருப்பதறிந்து, தலைவி கவலை கொள்கின்ருள். இனித் தினைப் புனம் காவல் கைகூடாது; ஆகவே, இத் தொடர்பு எப்படி முடியுமோ? என்று கவலைப்படுவது போலத், தலைவனும் கேட்டுணருமாறு தோழியிடம் சொல்லுகின்றதாக அமைந்த செய்யுள் இது.) வேங்கையும் புலி ஈன்றன: அருவியும் தேம்படு நெடுவரை மணியின் மானும்: அன்னேயும் அமர்ந்துகோக் கினளே, என்னையும் களிற்றுமுகம் திறந்த கல்லா விழுத்தொடை ஏவல் இளையரொடு மாவழிப் பட்டெனச் 5 * "கிறுகிளி முரனிய பெருங்குரல் ஏனல் காவல் ெேயன் ருேளே? சேவலொடு சிலம்பின் போகிய சிதர்கால் வாரனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/394&oldid=774560" இலிருந்து மீள்விக்கப்பட்டது