பக்கம்:நற்றிணை-2.pdf/405

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை 401 பயன் : தலைவி களிப்பிலே மிதப்பவளாவாள் என்பதாம். ஆர்வமும் எதிர்பார்ப்பும் உள்ளத்தை நிறைக்க, நிகழ்வதை அறியத் துடிப்பள் என்பதுமாம். 394 தண்ணியன் கொல்லோ! பாடியவர்: ஒளவையார். திணை: முல்லை. துறை: (1) வினை முற்றி மறுத்தரா நின்ற தலைமகனை இடைச்சுரத்துக் கண்டார் கூறியது; (2) வன்சொல்லாற்.குறை நயப்பித்த தோழி, தான் தனித்துக் கூறியதும் ஆம். - ((து-வி.) : (1) வினை முடித்து மகிழ்வோடு வீடு திரும்பி வரும் தலைவனை, வழியிலே கண்டவர் வியந்து பாராட்டித் தம்முள் கூறிக்கொள்வதாக அமைந்த செய்யுள் இது: (2) தலைவன் வந்து எவ்வளவு வேண்டியும் தலைவிக்கு அவன், குறையைச் சொல்லி இசைவித்துக் கூட்டுவதற்கு இசைய மறுத்த தோழி, அவன வியந்து தன்னுள்ளே சொல்லிக் கொள்வதாக அமைந்த செய்யுள் எனினும் ஆம்.) - மரந்தலை மணந்த கனந்தலக் கானத்து. அலங்தலை ஞெமையத்து இருந்த குடிஞை பொன்செய் கொல்லனின் இனிய தெளிர்ப்பப் பெய்ம்மணி யார்க்கும் இழைகிளர் நெடுங்தேர் வன்பரல் முரம்பில் நேமி அதிரச் - 5 சென்றிசின் வாழியோ, பனிக்கடு நாளே, இடைச்சுரத் தெழிலி உறைத்தென மார்பின் குறும்பொறிக் கொண்டே சாந்தமொடு நறுந்தண் ணியன்கொல் கோகோ யானே? தெளிவுரை : மரங்கள் மிகவும் நெருங்கி அடர்ந்துள்ள இடமகன்ற கானத்திடத்தே, வாடிப்போன ஞெமை மரத்திலே இருந்த பேராந்தையானது, பொன்வேலை செய்யும் கொல்லன் தட்டி எழுப்பும் ஒலிபோல இனிதாக ஒலித்துக்கொண்டிருக்க, பெய்துள்ள மணிகள் ஒலிக்கும் அணியூட்டிய நெடிய தேரிலே, வன்மையான பரற்கற்கள் பொருந்திய மேட்டு நிலத்திலே தேர்ச்சக்கரம் அதிரும்படியாக, முன்பணி கடுமையாகப் பெய்த நாளிலே வேற்றார் நோக்கி வின்பொருட்ட்ாகச் சென்றனன். அவன்தான், இப்போது இடைச் சுரத்திடத்தேயே மேதங்கள் மழைபொழிந்ததென, ம்ர்ர்பினிடத்தே குறுகிய புள்ளிகளைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/405&oldid=774586" இலிருந்து மீள்விக்கப்பட்டது