பக்கம்:நற்றிணை-2.pdf/408

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404 நற்றிணை தெளிவுரை சொற்பொருள் : எலுவ - தோழ, நண்ப நொது ம லாளன் - அயலான். பகடு - போர் க் க ளி று. குட்டுவன் - சேரருள் ஒருவன். வேந்தடு களம் - பகை வேந்தரைக் கொன் றழித்த போர்க்களம். முரசு - வெற்றி முரசு. புணரி - அலை. மரீஇ ஆர்ந்த கலவையாகத் தின்ற பேரிசை - பெரும்புகழ்: பேர்ாரவாரமும் ஆம். மாந்தை - மாந்தைப் பட்டினம்; மரந்தை எனவும் வழங்கும். - உள்ளுறை : கடலாடும் மகளிர் கூந்தலிலிருந்து கழிந்து கடலலையோடு கரையிலே ஒதுங்கிய பலவகையான பூக்களையும் முதிர்ந்த பசுவானது தின்னும் என்றனள். இது நின்னல் நலனுண்டு கைவிடப்பெற்றுத் துயருற்றுற்றிருக்கும் தலைவியை ஏதிலார் வந்து மணம் பேசிக்கொள்வற்கு முற்படுவர் என்று குறிப்பாற் கூறியதாம். விளக்கம் : மகளிர் அலைகடலிலே பாய்ந்து பாய்ந்து கடலாடி மகிழும் ஆரவாரத்திற்கு, குட்டுவன் வேந்தடு மயக் கத்து முரசின். அதிர்வை ஒப்புமையாகக் கூறினது மிகவும் சிறப்பாகும். அலையலையாக வரும் எதிர்ப்பணிகளை மோதி வீழ்த்தி வெற்றிகொள்ளும் செயலும், அலைபாய்ந்து நீராடும் செயலும் போர்க்களத்தை நினைப்பிக்கும். முல்லையிலே காடு சென்று மேய்ந்து பசுக்கள் வீடு திரும்பும் மாலைக் காலம் என்பர்; அதுபோலவே இங்கே கடற்கரையிலே பூக்களைத் தின்றுவிட்டு பசு வீடு திரும்பும் மாலை என்று கூறினர். ஓங்கற் புணரி என்பதனை, கடற்கரையிலுள்ள உயர்ந்த பாறைகளிலே. மோதும் அலைகள் எனக்கொண்டு, அப்போது எழும் ஒலி போர் முரசின் ஒலிபோன்று இருக்கும் என்றும் சொல்லலாம். வேட்டனை அல்லையால் நலம் தந்து சென்மே என்பது அவனைச் சுட்டெரிக்கும் சுடுசொற்கள். . அவன் தன் குறையறிந்து விரைவில் மணம்பேசி வருதற்கு ஆவன செய்வான் என்பதாம். பயன் : தலைவன் மணம்பேசி வந்தானகத், தமரும் இசைவு சொல்ல, அவர்கள் மணந்து, பிரியாத இல்லற இன்பத்திலே திளைப்பர் என்பதாம். 396 ஏமம் என்று அருளாய்! பாடியவர் : ........... தின : குறிஞ்சி. துறை : (1) தோழி, தலைமகனை வரைவு கடாயது: (2) வரைவு உணர்த்தப் பட்டு ஆற்ருளாய்ச் சொல்லியது.உம் ஆம்; (3) இரவுக்குறி மறுத்தது உம் =LD,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/408&oldid=774592" இலிருந்து மீள்விக்கப்பட்டது